உப்புக்குளம் அரச காணி வழங்கலில் பாரபட்சம் - நூர் முஹமட் ஆலம்
மன்னார் உப்புக்குளம் கோந்தைப்பிட்டி அரச காணி வழங்கலுக்கு கடந்த வருடம் விண்ணப்பங்கள்,கோரப்பட்டு இதன் அடிப்படையில் இக் கிராமத்தில் வசித்துவந்த மக்கள் மற்றும் அதனுடன் 1990ல் இடம் பெயர்ந்து நாட்டில் ஏனைய பகுதிகளில் வசித்து வரும் இவ் ஊரைசேர்ந்தவர்கள் எனசுமார் 450 பேர் விண்ணப்பம் செய்து இருந்தனர்.
ஆனால் இப்பகுதியில் 90காணித் துண்டுகளே காணி அளவீடு செய்யப்பட்டுள்ளது என மன்னார் உப்புக்குளம் சன சமூக நிலையத்தின் தலைவர் நூர் முஹமட் ஆலம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,
இதே பகுதியில் சுமார் 10 ஏக்கருக்கும் மேற்பட்ட காணி துறைமுக அதிகாரசபைக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.ஆனால் எமது மக்கள் காணியற்ற நிலையில் மீள் குடியமர விண்ணப்பித்த அவர்களுக்கான காணி இப்பகுதிகளில் வழங்கப்படதால் அவர்கள் மீள் குடியமர்வில் விரைவு காட்டப்படாமல் இழுத்தடிக்கப்படுகின்றது.
இவர்களை மீள் குடியமர்த்தவே இக்காணிக்கச்சேரி நடை பெறுவதாக அமைச்சரின் இணைப்பானரால் கூறப்பட்டாலும் இக்காணிகள் போதுமானதாக இல்லை.
இருந்தும் இவ் விண்ணப்பங்களின் அடிப்படையில் பிரதேச செயலகம் சுமார் 110 பேர் கொண்ட முதல் தெரிவு பட்டியலை வெளியிட்டது.
இது பெரும்பாலும் இம்மக்களின் முக்கிய தேவையுடையோர் அடங்கி இருந்தனர்.
இவ் பெயர் பட்டியல் வெளியானதும் பிரதேச செயலாளருடன் இப்பகுதியில் செல்வாக்கு செலுத்துவோர் இப்பட்டியலை நிராகரித்து புதிய பட்டியல் ஒன்றினை தாயரிக்கும் படி பிரதேச செயலாளரை வற்புறுத்தியதன் பேரில் மீளவும் காணிக்கச்சேரி என்ற பெயரில் மக்களை அழைத்து காணி வழங்கல் தெரிவு இடம் பெற்று வருகின்றது.
இத் தெரிவும் அவர்களால் குறிப்பிட்ட தினங்களில் நடை பெறாமல் காலமும் நேரமும் ஒரு சிலரின் விருப்பத்துக்கு ஏற்றவாறு நடைபெறுகிறது.
இக்காணிக் கச்சேரிக்கு என இடம் பெயர்ந்து வாழ்ந்து வரும் இவ் ஊர் மக்கள் பல ஆயிரம் ரூபாய்களை செலவு செய்து பல தடவைகள் வருகை தந்தும் அங்கு வருகை தரும் சிலரால் தேவையற்ற காரணங்கள் கூறப்பட்டு அவர்கள் நிந்திக்கப்படுவதுடன் அவர்களின் விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டு வகுகின்றது.
ஆனால் தங்கள் குடும்ப உறவுகள் இக் காணியினை பெற்றுக்கொள்ள சிபாரிசு செய்கின்றனர். தங்கள் குடும்பங்களில் அனைவரும் காணி பெற்றுக்கொள்ள சிபாரிசு செய்யும் இவர்கள் ஏனையவர்கள் மற்றும் தேவையுடையோர்களை தங்கள் சொந்த பகை மற்றும் அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக நிராகரிக்கின்றனர்.
இத் தெரிவில் மன்னார் நகரசபைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி கண்டவரே இவ்வாறான செயற்பாடுகளில் தொடர்புடையவராக உள்ளார்.
முன்னைய பிரதேச செயாலாளர் ஊடாக பிழையான முறையில் பெறப்பட்ட காணிக்கான அனுமதிக் கடிதங்களும் தாராளமாக அனுமதியற்ற விதத்தில் தங்கள் உறவினர்களையும் இக்காணிகளில் குடியமர்த்தி உள்ளனர்.
இவர்களை இத்தெரிவில் உள்வாங்க இவர்கள் தங்களது பதவி மற்றும் அரசியல் செல்வாக்கினை செலுத்துகின்றனர். இதனால் இக்காணியினை பெற்றுக்கொள்ள வருகை தரும் மக்களின் காலமும் பணமும் வீணடிக்கப்பட்டுள்ளது.
எனவே விண்ணப்பங்களின் அடிப்படையில் இம்மக்கள் அனைவருக்கும் காணி வழங்கப்பட வேண்டும். அதற்காக துறைமுக அதிகாரசபைக்கு வழங்க உள்ள காணி இம்மக்களின் குடியிருப்பு தேவைக்கென வழங்கப்பட்டு இவர்கள் மீள் குடியமர நடவடிக்கை எடுத்து ஏனையவர்களின் தலையீடுகள் இல்லாமல் வாழங்கப்பட வேண்டும் என்பது எமதுஎதிர்பார்ப்பாக உள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.
உப்புக்குளம் அரச காணி வழங்கலில் பாரபட்சம் - நூர் முஹமட் ஆலம்
Reviewed by NEWMANNAR
on
September 04, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
September 04, 2014
Rating:


No comments:
Post a Comment