மன்னார் மாவட்ட கிரிக்கெட் சங்க மீளமைப்பும் புதிய நிர்வாகத் தெரிவும்-Photo
மன்னார் மாவட்ட கடினபந்து கிரிக்கெட் வளர்ச்சி கருதியும் பல வருடங்களாக செயற்படாமல் இருந்த மன்னார் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தினை செயற்பட வைப்பதற்காகவும் கடின பந்து விளையாடும் கழங்கள் ஒன்றிணைந்து பல முயற்சிகள் மேற்கொண்டும், பழைய நிர்வாகிகளோடு அணுகியும் பலன் அளிக்காத நிலையில், மாவட்ட விளையாட்டு அதிகாரியிடம் எழுத்து மூலமான வேண்டுகோள் விடுத்ததற்கிணங்க மாவட்ட விளையாட்டு அதிகாரியின் தலைமையில் கடந்த 2014-08-31ம் திகதி மன்னார் ஆகாஸ் ஹோட்டலில் கடினபந்து கிரிக்கெட் விளையாடும் 09 கழகங்களினால் மன்னார் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் புதிய நிர்வாகத் தெரிவு மேற்கொள்ளப்பட்டது.
இக்கூட்டத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ S.நோகராதலிங்கம் கலந்துகொண்டார்.
புதிய நிர்வாகத் தெரிவின்படி தலைவராக P.அருள், உபதலைவர்களாக கு.வேங்கைமாறன், T.ஜெயக்குமார், M.N.M.ரியாஜ், S.கோபாலப்பிள்ளை, செயலாளராக யு.அமல்ராஜன், உபசெயலாளராக A.T.லுஸ்ரின், பொருளாளராக G.லங்கேஸ்வரன், உபபொருளாளராக G.M.ஜக்சன் என்பவர்கள் தெரிவு செய்யப்படார்கள்.
இந்த புதிய மன்னார் மாவட்ட கிரிக்கெட் சங்க நிர்வாகத்தில் 08 கழகங்கள் பங்குபற்றியிருப்பது முக்கியமான விடயமாகும்.
தெரிவு செய்யப்பட்ட புதிய நிர்வாகத்தின் துரிதமான செயற்பாட்டின் மூலம் இம் மாதம் 19,20,21ம் திகதிகளில் பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கு 10 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டி மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் நடாத்தப்படவுள்ளது என்பது குறிப்படத்தக்க விடயமாகும்.
மேலும் 2015ம் ஆண்டு திட்டமிடலில் கழகங்களின் தனிப்பட்ட சுற்றுப்போட்டிகளை தவிர மாவட்ட கிரிக்கெட் சங்கத்தினால் பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கு 50 ஓவர்கள் கொண்ட சுற்றுப்போட்டி, T20 சுற்றுப்போட்டி, பாடசாலைகளுக்கிடையிலான 50 ஓவர்கள் கொண்ட சுற்றுப்போட்டி மற்றும் பயிற்சி முகாம்கள், மாவட்ட அணி தெரிவு செய்து வெளிமாவட்டத்திற்கு சென்று விளையாடுதல் என்பன திட்டமிடப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்ட கிரிக்கெட் சங்க மீளமைப்பும் புதிய நிர்வாகத் தெரிவும்-Photo
Reviewed by NEWMANNAR
on
September 10, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
September 10, 2014
Rating:





No comments:
Post a Comment