அண்மைய செய்திகள்

recent
-

தலைமன்னாரில் கைதான இந்திய மீனவர்கள் விளக்கமறியலில்; ஜெயலலிதா மோடிக்கு மீண்டும் கடிதம்

தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் ஆறு பேரையும் விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. கடற்படையினரால் கைது செய்யப்பட்டு ஒப்படைக்கப்பட்ட குறித்த மீனவர்கள் ஆறு பேரையும் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தியிருந்தனர். இதன்போது அவர்களை இம்மாதம் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் அனந்தி கனகரட்னம் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

 இவர்கள் இராமநாதபுரத்தில் இருந்து கடந்த 8ஆம் திகதி கடலுக்குச் சென்றிருந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதேவேளை, இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களையும் அவர்களது உடமைகளையும் விடுவிப்பதற்காக இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் இந்தியப் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளார் இலங்கை சிறையில் தற்போது 21 தமிழக மீனவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களது 64 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக முதல்வர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 கச்சத்தீவை மீட்பதன் ஊடாக மாத்திரமே மீனவர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என தமிழக முதல்வர் தமது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் என தான் நம்புவதாகவும் ஜெயலலிதா ஜெயராம் மேலும் குறிப்பிட்டுள்ளதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.
தலைமன்னாரில் கைதான இந்திய மீனவர்கள் விளக்கமறியலில்; ஜெயலலிதா மோடிக்கு மீண்டும் கடிதம் Reviewed by NEWMANNAR on September 10, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.