HIV தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டில் HIV தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய பாலியல் நோய்கள் மற்றும் HIV எயிட்ஸ் தடுப்பு பிரிவு தெரிவிக்கின்றது.
வருடத்தின் கடந்த ஆறு மாதங்களில் மாத்திரம் 210 HIV தொற்று நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய பாலியல் நோய்கள் மற்றும் HIV எயிட்ஸ் தடுப்பு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் சிசிர லியனகே குறிப்பிடுள்ளார்.
இதேவேளை, கடந்த ஆண்டின் முதல் ஆறு மாதத்திற்குள் 190 HIV தொற்றுக்குள்ளானவர்கள் பதிவாகியதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் மாதமொன்றுக்கு 15 தொடக்கம் 20 பேர் வரையில் HIV தொற்றுக்கு உள்ளாவதாகவும் டொக்டர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார்.
குறிப்பாக 29 வயது தொடக்கம் 45 வயதுக்கு இடைப்பட்டவர்களே HIV தொற்றால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனினும், 15 தொடக்கம் 20 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும் தற்போது அதிகளவில் HIV தொற்றுக்கு உள்ளாவாதாக தேசிய பாலியல் நோய்கள் மற்றும் HIV எயிட்ஸ் தடுப்பு பிரிவின் பணிப்பாளர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
HIV தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு
Reviewed by NEWMANNAR
on
September 02, 2014
Rating:

No comments:
Post a Comment