மன்னாரில் கடும் வரட்சி-குடி நீரைப்பெற்றுக்கொள்ளுவதில் மக்கள் சிரமம்.
மன்னார் மாவட்டத்தில் தற்போது கடும் வரட்சி நிலவி வருகின்ற நிலையில் மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட சிறுநீலாசேணை கிராமம் உட்பட அதனை அண்டிய கிராமங்களிலும் பாராய வரட்சி ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் குடிநீரைப்பெற்றுக்கொள்ளுவதில் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக நீலாசேணை விவசாய அமைப்பின் செயலாளர் ஆர்.கிங்ஸ்லி தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் வரட்சி தற்போது எமது கிராமத்திலும் ஏற்பட்டுள்ளது.தற்போது குடி நீரைப்பெற்றுக்கொள்ளுவதில் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
கிணறுகளில் காணப்பட்ட நீர் வற்றியுள்ளது.ஒரு சில கிணறுகளில் நீர் காணப்படுகின்ற போதும் அவ் நீர் உவர் நீராக காணப்படுகின்றது.நீர் தட்டுப்பாட்டினால் விவசாயம் மற்றும் வீட்டுத் தோட்டச் செய்கையும் பாதிப்படைந்துள்ளது.
குளங்களில் உள்ள நீரும் வற்றியுள்ளது.வீடுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள தோட்டங்களும் பாதிப்படைந்துள்ளது.
தற்போது எமது கிராமத்தில் குடி நீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் எமது கிராமத்தில் மீள் குடியேறியுள்ள 15 குடும்பங்களும் நொச்சிக்குளம் மற்றும் பட்டித்தோட்டம் ஆகிய கிராமங்களுக்கு இடம் பெயர்ந்து சென்றுள்ளனர்.
மன்னார் பிரதேச சபையினால் வாரத்தில் ஒரு தடவை குடி நீர் வினியோகம் மேற்கொள்ளப்பட்டு வந்தது.ஆனால் அவை எமக்கு காணாமல் உள்ளது.2009 ஆம் ஆண்டு இக்கிராமத்தில் மீள் குடியேற்றம் செய்யப்பட்டனர்.
தற்போது இந்திய வீட்டுத்திட்டம் மாத்திரமே எமது கிராமத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளது.
ஆனால் மின்சாரம்,குடி நீர், பாதை புனரமைப்பு போன்றவை இது வரை எமது கிராமத்தில் இல்லை.இதனால் மக்கள் விசப்பூச்சிகளின் தாக்குதல்களுக்கும் உள்ளாகின்றனர்.
எனவே எமது கிராமத்தில் தற்போது நிலவி வரும் குடி நீர் பிரச்சினையை தீர்த்து வைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீலாசேனை விவசாய அமைப்பின் செயலாளர் ஆர்.கிங்ஸ்லி மேலும் தெரிவித்தார்.
மன்னாரில் கடும் வரட்சி-குடி நீரைப்பெற்றுக்கொள்ளுவதில் மக்கள் சிரமம்.
Reviewed by NEWMANNAR
on
September 05, 2014
Rating:

No comments:
Post a Comment