இந்தியாவில் 50 பயணிகளுடன் பஸ் வௌ்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது
ஜம்மு காஷ்மீரில் பஸ் வண்டியொன்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டத்தில் 12 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
50 பேருடன் திருமண வீட்டிற்கு சென்ற பயணிகள் பஸ்ஸே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் திருமண ஜோடியும் பயணித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜம்மு காஷ்மீரில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையால் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
மீட்பு பணியாளர்கள் குறித்த பகுதிக்கு விரைந்துள்ளதுடன் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகின்றது.
இந்தியாவில் 50 பயணிகளுடன் பஸ் வௌ்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது
Reviewed by NEWMANNAR
on
September 04, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
September 04, 2014
Rating:


No comments:
Post a Comment