அண்மைய செய்திகள்

recent
-

அனுமதிப் பத்திரமின்றி பயணிக்கும் பஸ்களின் ஊழியர்களிடம் பொலிஸார் பணம் பெறுகின்றனர் – பா.டெனீஸ்வரன்

வடமாகாணத்தில் போக்குவரத்து பொலிஸார் தமது கடமைகளை உரிய முறையில் நிறைவேற்றும் பட்சத்தில் விபத்துக்களை குறைத்துக்கொள்ள  முடியும் என மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார்.


இந்த விடயம் தொடர்பில் இன்று நடைபெற்ற வடமாகாண சபை அமர்விலும் பிரஸ்தாபிக்கப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக வீதி அனுமதிப் பத்திரமின்றி தூரப் பிரதேச சேவையில் ஈடுபடும் பஸ்களின் ஊழியர்களிடம் பொலிஸார் பணம் பெற்றுக்கொள்வதாகவும் வடமாகாண போக்குவரத்து அமைச்சர் குற்றம் சுமத்துகின்றார்.

இதேவேளை, வடமாகாண போக்குவரத்து அமைச்சரின் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹனவிடம் வினவியபோது, அனைத்துப் பிரச்சினைகள் தொடர்பிலும் பொலிஸார் மீது மாத்திரம் குற்றம் சுமத்தப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என பதிலளித்தார்.

பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமைகளை உரிய முறையில் நிறைவேற்றத் தவறினால் அவர்களுக்கு எதிராக ஒழுகாற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, யாழ்ப்பாணத்திலிருந்து வெளி மாவட்டங்களுக்கான போக்குவரத்தில் ஈடுபடுவதற்கு வீதி அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொண்டுள்ள போதிலும் சில பஸ் உரிமையாளர்கள் பஸ்களை சேவையில் இதுவரை ஈடுபடுத்தவில்லை என வட மாகாண போக்குவரத்து அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

வீதி அனுமதிபத்திரம் பெற்றுக்கொண்டுள்ள உரிமையாளர்கள் பயணிகளின் நலன் கருதி குறுகிய காலத்திற்குள் பஸ்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாகாண அமைச்சர் பா.டெனீஷ்வரன் தெரிவிக்கின்றார்.
அனுமதிப் பத்திரமின்றி பயணிக்கும் பஸ்களின் ஊழியர்களிடம் பொலிஸார் பணம் பெறுகின்றனர் – பா.டெனீஸ்வரன் Reviewed by NEWMANNAR on September 10, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.