செட்டிக்குளம் குருக்கள் புதுக்குளம் கிராம மக்களின் காணிகளில் அத்துமீறி நுழைந்த 'வன இலாகா' திணைக்கள அதிகாரிகளை வெளியேற்றிய வினோ எம்.பி-Photo
செட்டிக்குளம் பிரதேச செயலக பிரிவில் உள்ள குருக்கள் புதுக்குளம் கிராமத்தில் உள்ள 24 பேருக்குச் சொந்தமான காணியினை 'வன இலாகா' திணைக்கள அதிகாரிகள் அபகரிக்கும் நோக்குடன் மேற்கொண்டு வந்த நடவடிக்கைகள் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கத்தின் தலையீட்டால் இன்று (8) கைவிடப்பட்டுள்ளதாக அக்கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
செட்டிக்குளம் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட குருக்கள் புதுக்குளம் கிராமத்தில் சுமார் 175 ஏக்கர் காணி உள்ளது.குறித்த காணியில் ஒரு குடும்பத்திற்கு 1 ஏக்கர் வீதம்  24 குடும்பங்களுக்கு 24 ஏக்கர் காணிகள் செட்டிக்குளம் பிரதேசச் செயலாளரினால் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் குறித்த 24 குடும்பங்களும் தமது காணியினை துப்பரவு செய்து மீள் குடியேருவது தொடர்பாக செட்டிக்குளம் பிரதேசச் செயலாளரிடம் கோரிக்கை விடுத்த நிலையில் கடந்த மாதம் 15 ஆம் திகதி(15-09-2014) குறித்த 24 குடும்பங்களுக்கும் பிரதேசச் செயலாளரினால் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த கடிதத்தில் வழங்கப்பட்ட ஒரு ஏக்கர் காணியினை துப்பரவு செய்து வேலி  அமைத்து குடியமர அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக குறித்த கடித்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அண்மையில் குறித்த காணிகளுக்கு சொந்தக்காரர்கள் தமது காணிகளை துப்பரவு செய்து வந்த நிலையில் அங்கு வந்த இராணுவத்தினர் இக்காணி இராணுவத்திற்கு சொந்தமானது.இங்கு எவரும் துப்பரவு செய்யக்கூடாது என தெரிவித்து மக்களை வெளியேற்றியுள்ளனர்.
பின் அங்கு சென்ற 'வன இலாகா' திணைக்கள அதிகாரிகள் குறித்த காணிகளை துப்பரவு செய்து எல்லைக்கற்களை அமைத்து வருகின்றனர்.
இது தொடர்பாக குறித்த காணியின் உரிமையாளர்கள் மீண்டும் அங்கு சென்று 'வன இலாகா' திணைக்கள அதிகாரிகளிடம் இது தொடர்பாக கேட்ட போது இக்காணிகள் அனைத்தும் 'வன இலாகா' திணைக்களத்திற்கு சொந்தமானது.
இக்காணியை துப்பரவு செய்து மரம் நடும் திட்டத்திற்கு எமக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் குறித்த காணியில் இன்று (8) காலை 'வன இலாகா' திணைக்கள அதிகாரிகள் மூன்று பேர் உள்ளடங்களாக கூலி ஆட்களை வைத்து குறித்த காணிகளை துப்பரவு செய்து எல்லைக்கள் அமைத்து வந்துள்ளனர்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்கள் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் மற்றும் செட்டிக்குளம் பிரதேச சபை உறுப்பினர் சிவம் ஜெகதீஸவரன் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.
இதன் போது பாதிக்கப்பட்ட மக்களுடன் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் மற்றும் செட்டிக்குளம் பிரதேச சபை உறுப்பினர் சிவம் ஜெகதீஸவரன் ஆகியோர் குருக்கள் புதுக்குளம் கிராமத்திற்குச் சென்றனர்.
இதன் போது வன இலாகா திணைக்கள அதிகாரிகள் காணி துப்பரவு செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
இது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் அங்கிருந்த வன இலாகா திணைக்கள அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.
எனினும் மேலிடத்தில் இருந்து தமக்கு வழங்கப்பட்ட அறிவித்தலுக்கு அமைவாகவே தாம் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதாக அவர்கள் தெரிவித்தனர்.
எனினும் இக்காணி 24 குடும்பங்களுக்கு செட்டிக்குளம் பிரதேசச் செயலாளரினால் வழங்கப்பட்டதோடு,இக்காணியில் துப்பரவு பணியினையும்,ஏனைய வேலைத்திட்டங்களையும் மேற்கொள்ள அந்த மக்களுக்கு பிரதேசச் செயலாளர் அனுமதி வழங்கியுள்ளதையும் பாராளுமன்ற உறுப்பினர் 'வன இலாகா' திணைக்கள அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டினார்.
எனினும் குறித்த துப்பபரவு பணிகள் தொடர்ந்தும் இடம் பெற்றுக்கொண்டிருந்த நிலையில் உடனடியாக குறித்த துப்பரவு பணிகளை நிருத்துமாறும்,குறித்த காணி மக்களுக்குச் சொந்தமானது.
வன இலாகா திணைக்களத்திற்கு இங்கு காணி எவையும் இல்லை எனவும்,மேலும் பின் பகுதியில் உள்ள சுமார் 150 ஏக்கர் காணிகள் மக்களுக்கே சொந்தமானது என பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
பிரதேச செயலாளரின் அனுமதியுடன் மக்கள் இங்கு தமது செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதோடு இந்த மக்கள் 40 வருடங்களுக்கு முன் வாழ்ந்து வந்ததாகவும்  யுத்தத்தின் காரணமாக இடம் பெயர்ந்து மீண்டும் இங்கு வந்துள்ளதாக தெரிவித்தார்.
இந்த நிலையில் 'வன இலாகா' திணைக்கள அதிகாரிகள் காடு அழித்து மேற்கொண்டு வந்த நடவடிககைகளை கைவிட்டுச சென்றனர்.
செட்டிக்குளம் குருக்கள் புதுக்குளம்  கிராம மக்களின் காணிகளில் அத்துமீறி நுழைந்த 'வன இலாகா' திணைக்கள அதிகாரிகளை வெளியேற்றிய வினோ எம்.பி-Photo
 
        Reviewed by NEWMANNAR
        on 
        
September 08, 2014
 
        Rating: 
      
 
        Reviewed by NEWMANNAR
        on 
        
September 08, 2014
 
        Rating: 






No comments:
Post a Comment