மூன்று வருடங்களின் பின்னர் திருடன் கைது
அக்கரைப்பற்று இசங்காணி சீமை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மூன்று இலட்சம் ரூபா பெறுமதியான நகைகளை கொள்ளையடித்து மூன்று வருடங்களாக தலைமறைவாக இருந்த நபரை கடந்த 1 ஆம் திகதி அக்கரைப்பற்று பொலிஸார் அக்கரைப்பற்று பஸ் நிலையத்தில் வைத்து கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர் கடந்த 2 ஆம் திகதி அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது நீதிபதி எச்.எம்.முஹம்மட் பஸீல் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது;
அக்கரைப்பற்று இசங்காணி சீமை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து மாடு மேய்த்து வந்த பொத்துவிலைச் சேர்ந்த ஒருவர் கடந்த 2011ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 3 ஆம் திகதி தங்கியிருந்த வீட்டிலிருந்து 3 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக வீட்டுக்காரர் அப்போது அக்கரைப்பற்று பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.
கொள்ளையடித்த நபர் தலைமறைவாகி கொழும்பு பொத்துவில் பகுதிகளில் தங்கியிருந்து வந்துள்ள நிலையிலேயே கைதாகியுள்ளார்.
மூன்று வருடங்களின் பின்னர் திருடன் கைது
Reviewed by NEWMANNAR
on
September 09, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
September 09, 2014
Rating:


No comments:
Post a Comment