அண்மைய செய்திகள்

recent
-

புத்துணர்வான வாழ்க்கைக்கு நவதானியங்கள் சாப்பிடுங்கள்!

இன்றைய காலத்தில் இயற்கை உரங்களை மறந்து செயற்கை உரங்களை பயன்படுத்தி விளைவிக்கப்படும் பயிர்களில் இருக்கும் உண்மையான சத்துக்கள் கூட நமது உடலுக்கு கிடைப்பதில்லை.
இன்றைய இளைஞர்கள் பலர் சத்தான உணவுகளை புறந்தள்ளிவிட்டு, உடலுக்கு தீமையை ஏற்படுத்தும் உணவுகளை பெரிதும் நாடி செல்கின்றனர்.

இதோ நம்மால் புறக்கணிக்கப்படும் நவதானியங்கள் சில,

நெல்

உமியுடன் கூடிய அரிசி, நெல் எனப்படுகிறது. உமியை நீக்கி அரிசியைப் பயன்படுத்துகிறோம்.

நெல்லை முறையாக அவித்து குத்தி பெறுவது புழுங்கலரிசி. பச்சரிசி எளிதில் ஜீரணிக்காது. கொழுப்பு சத்தை அதிகமாக்கும். இதனால், உடல் பருமனாகும். உடல் இளைத்தவர்கள் பச்சரிசியை சாப்பிடலாம்.

வயிறு தொடர்பான நோய் உள்ளவர்கள் பச்சரிசியை தவிர்க்க வேண்டும். புழுங்கல் அரிசி உடல் நலனுக்கு ஏற்றது. மலச்சிக்கல் ஏற்படாது.

சம்பா அரிசி வகையில் சீரகச்சம்பா ஆரம்பநிலை வாத நோய்களை போக்க வல்லது. பசியை ஊக்குவிக்கும், ஈர்குச்சம்பா அரிசி சாப்பிட ருசியானது. ஆனால், பித்தம்கூடும். குண்டுசம்பா, மிளகு சம்பா, மல்லிகை சம்பா, மணிச்சம்பா, கோரைச்சம்பா, கடைச்சம்பா, குறுஞ்சம்பா போன்றவை மருத்துவகுணம் நிறைந்தவை.



சோளம்

சோளத்தில் உடலுக்கு அவசியமான புரதம், இரும்பு, கால்சியம் சத்துக்கள் அடங்கி உள்ளன. சோள உணவுகள் உடலுக்கு உறுதியை அளிக்க வல்லது. உடல் பருமனை குறைக்கும்.

வயிற்றுப்புண்ணை ஆற்றும், வாய் நாற்றத்தை போக்கும், மூல நோயாளிகளுக்கு சோள உணவு ஒத்துக்கொள்ளாது.



கம்பு

கிராமங்களில் கம்பங்கஞ்சியும், கம்பஞ்சோறும் சாப்பிடுபவர்கள் மிக அதிகம். தாய்மார்களுக்கு பால் உற்பத்தியை பெருக்கும்.

உடல் வலிமையை அதிகரிக்கும். கம்பில் புரதம், சுண்ணாம்பு, பாஸ்பரஸ் போன்ற தாதுக்களும், உயிர்சத்துக்களும் உள்ளன.

அரிசியை விட பல மடங்கு சத்து மிகுந்த உணவு, ஜீரண சக்தி அதிகரிக்கும். உடல் வெப்பநிலையை சமநிலையில் வைத்திருக்கும். வேண்டாத கொழுப்புகளை கரைத்து பருமனைக் குறைக்கும்.



கேழ்வரகு

தானியங்களில் அதிக சத்துமிக்கது கேழ்வரகு. ராகி என்றும் இதை குறிப்பிடுவது உண்டு. இதில், புரதம், தாது உப்பு, சுண்ணாம்புச் சத்து, இரும்புச்சத்து மற்றும் உயிர் சத்துக்களும் இருக்கின்றன.

இது உடல் உஷ்ணத்தை சமநிலையில் வைத்திருக்கும், குடலுக்கு வலிமை அளிக்கும், நீரிழிவு நோயாளிகள் கூட கேழ்வரகால் செய்த பண்டங்களைச் சாப்பிடலாம். கேழ்வரகை கொண்டுதான் ராகி மால்ட் தயாரிக்கப்படுகிறது.



கோதுமை

அரிசியை விட கோதுமையில் அதிகமான சத்துக்கள் உள்ளன. எண்ணை நெய்விடாது சப்பாத்தியாக செய்து சாப்பிடுவது நல்லது.

கோதுமையில் புரதம், சர்க்கரை, சுண்ணாம்பு, பாஸ்பரஸ், இரும்பு, கரோட்டின், நியாசிக் போன்ற பல சத்துக்கள் உள்ளன. இது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த உணவாகும், மலச்சிக்கல் உண்டாகாது.



பார்லி

உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றி எடையை குறைக்கும். உடல் வறட்சியை போக்க வல்லது, நீடித்த மலச்சிக்கல் உள்ளவர்கள் பார்லியை சாப்பிட்டால் குணமாகும்.

காய்ச்சலை தடுக்கும், வெப்பநிலையை சமநிலையில் வைத்திருக்கும்.
புத்துணர்வான வாழ்க்கைக்கு நவதானியங்கள் சாப்பிடுங்கள்! Reviewed by NEWMANNAR on September 03, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.