அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் ஆரம்பமானது 79 ஆவது பொலிஸ் உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டிகள்.-Photo

மன்னாரில் ஆரம்பமானது 79 ஆவது பொலிஸ் உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டிகள்.

இலங்கையில் உள்ள 40 பொலிஸ் திணைக்களங்கள் பங்கு பற்றும் லீக் முறையிலான உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி கடந்த வெள்ளிக்கிழமை (3-10-2014) மாலை மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகியது.

லீக் முறையில் 80 போட்டிகள் இடம் பெறவுள்ள நிலையில் 1 ஆவது போட்டி கடந்த வெள்ளிக்கிழமை மாலை 3.30 மணியளவில் மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் கிளிநொச்சி மாவட்ட பொலிஸ் அணிக்கும்,மன்னார் மாவட்ட பொலிஸ் அணிக்கும்  இடையில் இடம் பெற்றது.

இதன் போது முதலாவது கோலினை மன்னார் மாவட்ட பொலிஸ் அணி வீரர் பிலிப் பெற்றுக்கொடுத்தார்.

2 ஆவது கோலி போட்டி ஆரம்பமாகி 21 ஆவது நிமிடத்தில் மன்னார் மாவட்ட பொலிஸ் அணி வீரர் ஜேசுதாச பெற்றுக்ககொடுத்தார்.

அதனைத் தொடர்ந்து 3 ஆவது கோலினை மன்னார் மாவட்ட பொலிஸ் அணி வீரர் பிரதீபன் பெற்றுக்கொடுத்தார்.

இடைவேளையின் பின் மீண்டும் போட்டிகள் ஆரம்பமாகியது.போட்டி ஆரம்பமாகி 40 ஆவது நிமிடத்தில் மன்னார் மாவட்ட பொலிஸ் அணி வீரர் யுவெஸ் 4 ஆவது கோலினை பெற்றுக்கொடுத்தார்.

இதனைத் தொடர்ந்து போட்டி ஆரம்பமாகி 53 ஆவது நிமிடத்தில் 5 ஆவது கோலினை மன்னார் மாவட்ட பொலிஸ் அணி வீரர் சுனேந்திரன் பெற்றுக்கொடுத்ததோடு 6 ஆவது கோலினை ஜேசுதாசன் என்பவரும்,7 ஆவது கோலினை பிரதிபன் என்பவரும்,8 ஆவது கோலினை மீண்டும் பிலிப் என்பவர் பெற்றுக் கொடுத்தார்.

இறுதி வரையும் கிளிநொச்சி மாவட்ட அணி போராடி எந்த கோலினையும் பெறாத நிலையில் 8-0 என்ற கோல் கணக்கில் மன்னார் மாவட்ட பொலிஸ் அணி வெற்றியை தனதாக்கிக்கொண்டது.

குறித்த முதல் சுற்றுப்போட்டிக்கு சிறப்பு விருந்தினர்களாக மன்னார் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஐ.வி.ரி.சுகதபால,மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அஜந்த றொட்ரிக்கோ,உப பொலிஸ் பரிசோதகர் ஒ.ஜி.சோமசுந்தர ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இரண்டாவது சுற்றுப்போட்டி எதிர்வரும் 10 ஆம் திகதி(10-10-2014) மாலை 3.30 மணிக்கு மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் மன்னார் மாவட்ட பொலிஸ் அணிக்கும் வவுனியா மாவட்ட பொலிஸ் அணிக்கும் இடையே இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 





மன்னாரில் ஆரம்பமானது 79 ஆவது பொலிஸ் உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டிகள்.-Photo Reviewed by NEWMANNAR on October 05, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.