அண்மைய செய்திகள்

recent
-

உலகின் சக்திவாய்ந்த கார் - தி பீஸ்ட் (The Beast)!

உலகின் மிகவும் முக்கியமான தலைவரைப் பாதுகாக்கவே உருவாக்கப்பட்ட கார் இது. பீஸ்ட் என்றழைக்கப்படும் காடிலாக் 1 (cadillac one) வகையைச் சேர்ந்த இந்த கார் அமெரிக்காவின் ஜனாதிபதியான பராக் ஒபாமா பயன்படுத்துவதற்காகத் தயாரிக்கப்பட்ட கார். மற்ற சாதாரண கார்களில் உள்ள அம்சங்களைவிட பல தொழில்நுட்ப வசதிகளை இது கொண்டுள்ளது. 18 அடி நீளமும், 8 டன் எடையும் கொண்ட இந்த கார் ஒரு அணு ஆயுதத்தின் பாதிப்பைத் தாங்கக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் கதவுகளின் தடிமன் 8 அங்குளமும் கவசத்திற்குச் சமமான புல்லட் ப்ரூஃபால் தயாரித்துள்ளனர். இதன் எடை ஒரு போயிங் 757 விமானத்தின் கதவுக்கு இணையானதாகும். இதன் உள்ளே wifi மற்றும் செயற்கைக்கோள் தொலைபேசி அம்சங்கள் உள்ளது. காரினுள் இருந்தபடியே ஜனாதிபதி மாளிகை மற்றும் அரசு அலுவலகங்கள் அனைதயும் தொடர்பு கொள்ளக்கூடியத் தொழில்நுடபம் உள்ளது. இவற்றுக்கு மேலாக இதில் தனிப்பட்ட ஆக்சிஜன் வசதியும் வேலியே உள்ள இரசாயன விஷக் காற்றுகள் உள்ளே வராதபடியும் வடிவமைத்துள்ளனர். இவை அனைத்தும் இந்த ராட்சஷ பீஸ்ட் காரின் முதல் கட்டப் பாதுகாப்பு அம்சங்களே ஆகும்.



உலகின் சக்திவாய்ந்த கார் - தி பீஸ்ட் (The Beast)! Reviewed by NEWMANNAR on October 07, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.