மன்னாரில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் இருந்து வெளிவரும் பாரிய துர்நாற்றத்தினால் மக்கள் பெரும் பாதிப்பு - Photos
மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில் அமைந்துள்ள பெந்த கோஸ்தே தேவாலயத்திற்கு பின்புறமாக புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தொழிற்சாலையில் இருந்து நாளாந்தம் பாரிய துர்நாற்றம் வீசி வருவதாகவும்,இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் பல்வேறு சுகாதார பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இவ்விடயம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்களும்,மன்னார் எழுத்தூர் பெரியகமம் மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்தினரும் மன்னார் நகரசபை,மாவட்ட அரசாங்க அதிபர்,பிரதேசச் செயலாளர் மற்றும் மன்னார் மாவட்ட மத்திய சுற்றாடல் அலுவலகம் ஆகியோரிடம் எழுத்து மூலம் தெரியப்படுத்தியுள்ளனர்.
குறித்த தொழிற்சாலையானது கழிவு மீன்களை பதப்படுத்தி கோழித்தீன் தயாரிக்கும் செயற்பாட்டில் திடீர் என ஈடுபட்டு வந்தனர்.மீன்களை அவித்து பதப்படுத்தும் போது அப்பகுதியில் பாரிய துர்நாற்றம் ஏற்படுகின்றது.
அப்பகுதியில் உள்ள பெரிகமம் உற்பட பல கிராமங்களில் இவ் துர்நாற்றத்தின் தாக்கத்தினால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்து பார்த்த போது குறித்த தொழிற்சாலை அமைப்பதற்கான கட்டிட அனுமதி மன்னார் நகர சபையில் பெற்றுக்கொள்ளப்படவில்லை.
அதே வேளை தொழிற்சாலைக்கான அனுமதி சுற்றுச்சூழல் திணைக்களத்திடமும் பெற்றுக்கொள்ளாத நிலையில் இவ் தொழிற்சாலை அமைக்கப்பட்டு செயற்பட்டு வருவதாக பெரியகமம் மாதர் கிராம அபிவிருத்திச்சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த நிலையில் மன்னார் நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம் தலைமையிலான குழுவினர் குறித்த தொழிற்சாலையை நேற்று(19) நேரில் சென்று பார்வையிட்டதோடு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதாக தெரிவித்தார்.
மன்னாரில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் இருந்து வெளிவரும் பாரிய துர்நாற்றத்தினால் மக்கள் பெரும் பாதிப்பு - Photos
Reviewed by NEWMANNAR
on
November 20, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
November 20, 2014
Rating:






No comments:
Post a Comment