தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ஆணின் முண்டம் மீட்பு
கம்பளை நகரில், தலைதுண்டிக்கப்பட்ட நிலையில் இன்று காலை ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டதாக கம்பளை பொலிஸார் தெரிவித்தனர்.
கடுகண்ணாவை வீதியில் மீட்கப்பட்ட இச்சடலம் 50 வயதுடைய ஆணொருவருடையதென தெரிவித்த பொலிஸார், குறித்த சடலம் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் இரத்தக் காயங்களுடன் பாதை ஓரமாகக் காணப்பட்டதாக தெரிவித்தனர்.
இச்சடலத்திலிருந்து சுமார் 17 கிலோமீற்றர் தூரத்துக்கு நாவலப்பிட்ட பக்கமாக இரத்தக் கறை காணப்பட்டதுடன் சடலத்தில் பல இடங்களிலும் காயங்கள் காணப்பட்டன.
இந்நபர் கொலை செய்யப்பட்டு அல்லது நள்ளிரவு வாகனமொன்றில் மோதுண்ட பின்பு குறித்த இடத்தில் கொண்டுவந்து போடப்பட்டிருக்கலாம் என்றும்; பொலிஸார் நம்புகின்றனர்.
இச்சடலம் கம்பளை போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதுடன் கம்பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ஆணின் முண்டம் மீட்பு
Reviewed by NEWMANNAR
on
November 06, 2014
Rating:

No comments:
Post a Comment