அண்மைய செய்திகள்

recent
-

ஒட்டுசுட்டானில் காணாமற்போன மூன்று சிறுவர்களில் ஒருவர் மீட்பு

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் தச்சடம்பன் கிராமத்தில் காணாமற்போன மூன்று சிறுவர்களில் ஒருவரை பொலிஸார் மீட்டுள்ளனர்.

தச்சடம்பன் கிராமத்தை அண்மித்த காட்டுப் பகுதியிலுருந்து குறித்த சிறுவன் இன்று முற்பகல் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

பாடசாலைக்கு செல்வதாக கூறி வீட்டிலிருந்து நேற்று காலை புறப்பட்ட மூன்று சிறுவர்களும் காட்டுப் பகுதிக்குள் சென்றுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

ஏனைய இரண்டு சிறார்களும் குறித்த காட்டுப் பகுதிக்குள் பதுங்கியுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

மீட்கப்பட்ட சிறுவனிடம் வாக்குமூலம் பதிவு செய்ததன் பின்னர் சிறுவர் நன்நடத்தை மற்றும் பாதுகாப்பு நிலையத்திற்கு அனுப்பி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

காட்டுக்குள் பதுங்கியுள்ள ஏனைய இரண்டு சிறுவர்களையும் மீட்கும் பணிகளுடன், மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
ஒட்டுசுட்டானில் காணாமற்போன மூன்று சிறுவர்களில் ஒருவர் மீட்பு Reviewed by NEWMANNAR on November 20, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.