அண்மைய செய்திகள்

recent
-

வட மாகாண சபையில் ஆறு பிரேரணைகள் நிறைவேற்றம்


ஐஸ்கிறீம் உற்பத்திகள் மீதான தடை தொடர்பான கவனயீர்ப்பு பிரேரணை உட்பட ஆறு பிரேரணைகள் வட மாகாண சபையில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளன.

வட மாகாண சபையின் 19ஆவது அமர்வு அவைa\த் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலைமையில் யாழ். கைதடியிலுள்ள மாகாண சபைக் கட்டடத் தொகுதியில் நடைபெற்றது.

அமர்வில் எதிர்க்கட்சித் தலைவர் சீ.தவராசாவினால் கொண்டுவரப்பட்ட கவனயீர்ப்பு பிரேரணை உட்பட 06 பிரேரணைகள் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளன.

வட மாகாணத்தில் ஜஸ்கிறீம் உற்பத்திகளுக்கு விதிக்கப்பட்ட தடை தொடர்பில் கொண்டுவரப்பட்ட கவனயீர்ப்பு பிரேரணைக்கு மாகாண சபை உறுப்பினர்கள் டொக்டர் ஞா. குணசீலன், டொக்டர் எஸ். சிவமோகன், பா. டெனீஸ்வரன், யூ. அஸ்மின் மற்றும் க. சர்வேஸ்வரன் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஐஸ்கிறீம் உற்பத்திகளுக்கு விதிக்கப்பட்ட தடையால் 20,000 வர்த்தகர்களும், மூவாயிரத்திற்கும் அதிகமான தொழிலாளர்களும் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளதாக மாகாண சபையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

தடை விதிக்கப்பட்ட 59 ஐஸ்கிறீம் உற்பத்தி நிறுவனங்களில் 38 சிறுகைதொழில் உற்பத்தி நிலையங்கள் அடங்குவதாக இதன்போது எதிர்கட்சி தலைவர் சீ.தவராசா சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், ஐஸ்கிறீம் கடைகளுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை, ஏனைய உணவகங்கள் தொடர்பில் முன்னெடுக்கப்படாமை குறித்தும் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், ஐஸ்கிறீம் உற்பத்திகளுக்கு தடை விதிக்கப்பட்டமை தொடர்பில் சபை அமர்வில் வாத, பிரதிவாதங்கள் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் அமர்வில் பிரசன்னமாகியிருக்கவில்லை.

இதனைத்தவிர, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை வலியுறுத்தி மற்றுமொரு பிரேரணை நிறைவேற்றப்பட்டதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு ஜனாதிபதியும், சட்ட மாஅதிபரும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்த பிரேரணை ஊடாக வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், மந்திரி மனையை மாகாண சபையின் கீழ் நிர்வகிப்பது தொடர்பான பிரேரணையும், வட மாகாண சபையில் உள்ளக கணக்காய்வு முன்னெடுக்கப்பட வேண்டுமென்ற பிரேரணையும் நிறைவேற்றப்பட்டுள்ளன.

பிற்பகல் 3.30 வரை இடம்பெற்ற மாகாண சபையின் அமர்வு எதிர்வரும் டிசம்பர் 04 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வட மாகாண சபையில் ஆறு பிரேரணைகள் நிறைவேற்றம் Reviewed by NEWMANNAR on November 19, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.