கல்வியில் சாதனை படைத்து மன்னார் மாவட்டத்திற்கு அகில இலங்கை ரீதியில் புகழ் ஈட்டித்தந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு -Photos
மன்னார் மாவட்டத்தில் கல்வியில் சாதனை படைத்து மன்னார் மாவட்டத்திற்கு அகில இலங்கை ரீதியில் புகழ் ஈட்டித்தந்த மாணவச் செல்வங்களை கௌரவிக்கும் நிகழ்வு 2014.11.17 இன்று மாலை மன்னார் சித்திவினாயகர் பாடசாலையில் மன்னார் வலயக்கல்விப் பணிப்பாளர் திருவாளர் சியான் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்விற்குப் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட வன்னிமாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹுனைஸ் பாரூக் கல்வியில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பதக்கம் அணிவித்து, பரிசில்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி வைத்தார்.மற்றும் பிரதம அதிதி வன்னிமாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹுனைஸ் பாரூக் அவர்களுக்கு மன்னார் வலயக்கல்விப் பணிப்பாளர் திரு. சியான் நிநினைவுச் சின்னத்தினையும் வழங்கி வைத்தார்.
கல்வியில் சாதனை படைத்து மன்னார் மாவட்டத்திற்கு அகில இலங்கை ரீதியில் புகழ் ஈட்டித்தந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு -Photos
Reviewed by NEWMANNAR
on
November 17, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
November 17, 2014
Rating:








No comments:
Post a Comment