மன்னார்,மாந்தை மேற்கு பிரதேச செயலாளர்களுக்கு திடீர் இடமாற்றம்.- Photos
மன்னார்,மற்றும் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர்கள் நேற்று(17) திங்கட்கிழமை மதியம் முதல் அமுலுக்கு வரும் வகையில் திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளராக கடமையாற்றிய அன்ரன் என அழைக்கப்படும் கிரிஸ் கந்தராஜா மன்னார் பிரதேச செயலாளராக உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மன்னார் பிரதேசச் செயலாளராக கடமையாற்றிய கே.வசந்தகுமார் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட வெள்ளாங்குளம் கணேசபுரம் கிராமத்தில் கடந்த புதன் கிழமை இரவு முன்னால் புலி உறுப்பினர் ஒருவர் சுட்டு படுகொலை செய்யப்பட்டார்.
அவரது கொலை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட திவிர விசாரணைகளின் போது மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
குறித்த சந்தேக நபர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் வெள்ளாங்குளம் கிராம அலுவலகர் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையிலே நேற்று(17) திங்கட்கிழமை மதியம் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளராக கடமையாற்றிய அன்ரன் என அழைக்கப்படும் கிரிஸ் கந்தராஜா மன்னார் பிரதேச செயலாளராக உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது...
மன்னார்,மாந்தை மேற்கு பிரதேச செயலாளர்களுக்கு திடீர் இடமாற்றம்.- Photos
Reviewed by NEWMANNAR
on
November 18, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
November 18, 2014
Rating:


No comments:
Post a Comment