அண்மைய செய்திகள்

recent
-

பாவானவை பாம்பை வைத்து கடிக்கவிட்ட பெற்றோர்: பரபரப்பு சம்பவம்

டெல்லியில் காதல் விவகாரத்தால் கல்லூரி மாணவி கவுரவக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
டெல்லி தென்மேற்கு பகுதியான கக்ரோலாவில் பாரத் விகார் என்ற இடத்தைச் சேர்ந்தவர் ஜக் மோகன் யாதவ்.

இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மகள் பாவனா யாதவ் டெல்லி வெங்கடேஷ்வரா பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதம் இறுதி ஆண்டு படித்து வருகிறார்.

பாவனாவுக்கும், அபிஷேக்சேத் (24) என்பவருக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் முதலில் பல்கலைக்கழகத்தில் சாதாரணமாக சந்தித்தனர்.

பின்னர் நண்பர்களாக பழகினர். நாளடைவில் அது காதலாக மாறியது. அபிஷேக்சேத் அரசு ஊழியராக பணிபுரிகிறார்.

வெவ்வேறு பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதால் பாவனா பெற்றோர் திருமணத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் பாவனாவும், அபிஷேக்கும் பெற்றோருக்கு தெரியாமல் டெல்லி ஆர்ய சமாஜ் கோவிலில் ரகசிய திருமணம் செய்து கொண்டனர்.

அதன் பிறகு பாவனாவை அபிஷேக் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றார். புதுமண தம்பதியை அபிஷேக் பெற்றோர் ஏற்றுக் கொண்டனர்.

மகள் ஓடிப் போய் திருமணம் செய்ததால் பாவனாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து பாவனாவின் பெற்றோர் அபிஷேக் வீட்டுக்குச் சென்று உங்கள் திருமணத்தை ஏற்றுக் கொள்கிறோம் என்றும் தடபுடலாக திருமணம் செய்து வைக்கிறோம் எனக் கூறி ஏமாற்றி பாவானவை வீட்டுக்கு அழைத்து சென்றனர்.

வீட்டுக்கு சென்றதும் மகளிடம் காதல் திருமணத்தை ஏற்க மாட்டோம் என்று கூறியுள்ளனர். மேலும் உறவினர்கள் சமாதானப்படுத்தியும் பாவனா காதல் திருமணத்தில் உறுதியாக இருந்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர் மகளை அடித்து உதைத்ததில், பாவனா பரிதாபமாக இறந்தாள்.

இதனைத் தொடர்ந்து பிணத்தை ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் என்ற இடத்துக்கு கொண்டு சென்று அங்குள்ள சொந்த கிராமத்தில் எரித்து விட்டனர்.

இந்த தகவல் கிடைத்ததும் அபிஷேக் டெல்லி பொலிசில் புகார் செய்தார். பொலிசார் வழக்குப்பதிவு செய்து பாவனா பெற்றோர் ஜக்மோகன் யாதவ் – சாவித்திரியை கைது செய்தனர்.

இதுகுறித்து பாவனா வீட்டின் பக்கத்தில் வசிப்பவர்கள் கூறுகையில், பாவனாவை பெற்றோர் கொடூரமாக சித்ரவதை செய்தனர், பாம்பை விட்டு கடிக்க வைத்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
பாவானவை பாம்பை வைத்து கடிக்கவிட்ட பெற்றோர்: பரபரப்பு சம்பவம் Reviewed by NEWMANNAR on November 20, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.