புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை மாணவன் உயிரியல் பிரிவில் மன்னார் மாவட்டமட்டத்தில் முதலாது இடத்தைப் பெற்றுள்ளார்.
விடத்தல்தீவு கிராம மைந்தன் ஜெறோம் றொசிங்ரன் எமில் அவர்கள் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் கல்வி கற்று இவ்வருடம் நடைபெற்ற க.பொ.த.உயர்தர பரீட்சையில் உயிரியல் பிரிவில் 2A,B பெற்று மன்னார் மாவட்ட மட்டத்தில் முதலாது இடத்தைப் பெற்றுள்ளார். இவர் தனது ஆரம்ப கல்வியை விடத்தல்தீவு தூய யோசவ்வாஸ் மகா வித்தியாலயத்தில் கற்று 5ம் ஆண்டு புலமைப்பரீட்சையில் சித்தியடைந்து பின் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் கல்வி கற்று க.பொ.த.சாதாரண தர பரீட்சையில் ஆங்கில மொழியில் பரீட்சை எழுதி 9A பெற்றவருமாவார்.
இவரையும் இவரது வெற்றிக்கு வித்திட்ட ஆசிரியர்கள்,பெற்றோர்,குடும்பத்தினர், கிராமத்தினர், நண்பர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதோடு மென்மேலும் பல வெற்றிகளை பெற கிராமத்தவர்களாகிய நாம் வாழ்த்துகின்றோம்.
|
புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை மாணவன் உயிரியல் பிரிவில் மன்னார் மாவட்டமட்டத்தில் முதலாது இடத்தைப் பெற்றுள்ளார்.
Reviewed by Admin
on
December 28, 2014
Rating:

No comments:
Post a Comment