புதிய ஜனாதிபதி மைத்திரிக்கு இந்திய பிரதமர் வாழ்த்து
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 2015ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டியமைக்காக இவ்வாறு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மைத்திரிபாலவிற்கு தொலைபேசி மூலம் அழைப்பினை ஏற்படுத்தி இவ்வாறு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அமைதியான, ஜனநாயக தேர்தலுக்காக இலங்கை மக்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதாக மோடி டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் அமைதியும் சுபீட்சமும் ஏற்பட தொடர்ந்தும் ஆதரவளிக்கப்படும் எனவும் மோடி தெரிவித்துள்ளார்.
புதிய ஜனாதிபதி மைத்திரிக்கு இந்திய பிரதமர் வாழ்த்து
Reviewed by NEWMANNAR
on
January 09, 2015
Rating:

No comments:
Post a Comment