நாட்டைவிட்டுச் செல்ல மாட்டோம்: பசில், நாமல்
2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மக்கள் வழங்கிய தீர்ப்புக்கு தலைவணங்குவதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், இந்த நாட்டை விட்டுச் செல்லமாட்டோம் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள பசில் ராஜபக்ஷ, 'ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு வாக்களித்த மக்களுக்கு எமது நன்றிகள் உரித்தாகட்டும்.
நாட்டின் ஒற்றையாட்சி மற்றும் ஆட்புல ஒருமைப்பாடு ஆகியவற்றைப் பாதுகாத்து, அவற்றுக்கு எந்தவொரு தடையும் ஏற்படாதவாறு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என நாம் நினைக்கிறோம்' என அவர் கூறினார்.
நாட்டைவிட்டுச் செல்ல மாட்டோம்: பசில், நாமல்
Reviewed by NEWMANNAR
on
January 09, 2015
Rating:

No comments:
Post a Comment