லண்டனில் ஆர்ப்பாட்டத்தின் போதும் சம்பந்தன், சுமந்திரன் ஆகியோரின் உருவப்படங்களை தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர்!
சம்பந்தன், சுமந்திரன் ஆகியோரின் உருவப்படங்களை லண்டனில் போராட்டத்தின் போதும் தீயிட்டுக் கொளுத்தி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
சிறீலங்கா மீதான போர்க்குற்ற விசாரணை அறிக்கையானது தமிழ்மக்களுக்கு எந்த தீர்வையும் வழங்கப் போவதில்லை என்ற போதும் அதைக்கூட சமர்ப்பிக்காமல் காலந் தாழ்த்துவதன் பின்புலத்தை நன்கு அறிந்தவர்களாகவும், தமிழ் மக்களாகிய நாமே எமக்கான உரிமைகளை வென்றெடுக்கவும் எமது மண்ணை மீட்கவும் நீதிக்கான போராட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்பதை நன்கு உணர்ந்தவர்களாகவும் நீதிக்கான கவனயீர்ப்புப் போராட்டத்தில் பல நூற்றுக் கணக்கான தமிழ் உறவுகள் உணர்வோடு கலந்து கொண்டனர்.
லண்டனில் ஆர்ப்பாட்டத்தின் போதும் சம்பந்தன், சுமந்திரன் ஆகியோரின் உருவப்படங்களை தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர்!
Reviewed by NEWMANNAR
on
February 25, 2015
Rating:

No comments:
Post a Comment