கப்பல் விபத்தில் 68 பேர் உயிரிழப்பு
பங்களாதேஷில் பயணிகளை ஏற்றிச் சென்ற கப்பல் ஆற்றில் கவிழ்ந்து வீழ்ந்துள்ளது.
இந்த விபத்தின் போது 68 பேர் உயிரிழந்துள்ளனர் என்று வௌிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தலைநகர் டாக்காவுக்கு வட கிழக்கே 40 கிலோ மீட்டர் தொலைவில் பத்மா நதியில் சென்று கொண்டிருந்த குறித்த கப்பல் மீது சரக்கு கப்பல் ஒன்று மோதியதினாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கப்பல் விபத்துக்குள்ளான போது கப்பலில் சுமார் 150 பயணித்ததாக கூறப்படுகிறது. ஞாயிறு பிற்பகல் நடந்த இந்த சம்பவத்தில் இதுவரை 68 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
கப்பல் விபத்தில் 68 பேர் உயிரிழந்த சம்பவம் பங்களாதேஷில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
F
கப்பல் விபத்தில் 68 பேர் உயிரிழப்பு
Reviewed by NEWMANNAR
on
February 23, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
February 23, 2015
Rating:


No comments:
Post a Comment