காயாக்குழி யூதேயி நகர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு ஒலிபெருக்கி சாதனங்கள் கையளிப்பு-Photos
மீள்குடியேறி அடிப்படை வசதிகள் இன்றிக் காணப்படும் முசலி கல்விக் கோட்டத்திற் குற்பட்ட காயாக்குழி யூதேயி நகர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சியின் வன்னி மாவட்ட பிரதம அமைப்பாளருமான சட்டத்தரணி ஹுனைஸ் பாறூக் அண்மையில் விஜயம் செய்து பார்வையிட்டபோது அப்பாடசாலையில் தற்போது நிலவும் பல்வேறு குறைபாடுகளை பாடசாலையின் அதிபர் முன்வைத்திருந்தார்.
இதன் நிமிர்த்தம் பாராளுமன்ற உறுப்பினரின் பன்முகப்படுத்தப் பட்ட நிதியிலிருந்து பாடசாலை அதிபரால் சுட்டிக்காட்டப்பட்ட முக்கிய தேவைகளில் ஒன்றான ஒலிபெருக்கி சாதனங்களை வெகுவிரைவில் பெற்றுத்தருவதாக வாக்களித்திருந்மைக்கு அமைவாக சகல வசதிகளுடன் கூடிய நவீன முறையிலான உயர்ரக ஒலிபெருக்கி சாதனங்களை பாடசாலைக்கு பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சியின் வன்னி மாவட்ட பிரதம அமைப்பாளருமான சட்டத்தரணி ஹுனைஸ் பாறூக் குறித்த பாடசாலைக்கு நேரில் சென்று அப்பொருட்களை கையளித்திருந்தார்.
காயாக்குழி யூதேயி நகர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு ஒலிபெருக்கி சாதனங்கள் கையளிப்பு-Photos
Reviewed by NEWMANNAR
on
February 22, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
February 22, 2015
Rating:







No comments:
Post a Comment