அண்மைய செய்திகள்

recent
-

கிழக்கு மாகாண சபையின் புதிய பிரதி தவிசாளராக இந்திரகுமார் பிரசன்னா நியமனம்


கிழக்கு மாகாண சபையின் பிரதி தவிசாளர் எம்.எஸ்.சுபைருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பிரதி தவிசாளருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஏ.எல்.தவம் சபையில் இன்று சமர்ப்பித்திருந்தார்.

இந்த நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அடங்கலாக 19 உறுப்பினர்கள் வாக்களித்திருந்தனர்.

பிரேரணைக்கு எதிராக 11 வாக்குகள் கிடைத்துள்ளன.

கிழக்கு மாகாண சபையின் புதிய பிரதி தவிசாளராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்திரகுமார் பிரசன்னா நியமிக்கப்பட்டுள்ளார்.
கிழக்கு மாகாண சபையின் புதிய பிரதி தவிசாளராக இந்திரகுமார் பிரசன்னா நியமனம் Reviewed by NEWMANNAR on March 31, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.