முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகளவான மக்களின் காணிகளில் இராணுவத்தினர் முகாமிட்டுள்ளனர்-எஸ்.வினோ எம்.பி.- Photos
வட்டுவாகலிலிருந்து முள்ளிவாய்க்கால் வரையான பகுதிகளில் பொதுமக்களுக்கு சொந்தமான 600 ஏக்கருக்கும் அதிகமான காணிகளில் அரச படையினர் நிலை கொண்டுள்ளனர்.
அதே போல் புதுக்குடியிருப்பில் 20 ஏக்கர் காணி இராணுவத்தினரால் முகாமிடப்பட்டுள்ளது. இதைவிட கேப்பாபிலவு, செம்மலை, விசுவமடு, தீர்த்தக்கரை போன்ற கிராமங்களிலுள்ள மக்களின் காணிகள் நூற்றுக்கணக்கான ஏக்கர் கணக்கில் இராணுவம் சுவீகரித்து முகாமிட்டிருக்கின்றனர்.
இக்காணிகள் அனைத்தும் பொது மக்களிடம் மீள கையளிக்க பிரதமர் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் கோரியுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்ட செலயகத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற விஷேட கூட்டத்தில் மாவட்ட நிலைமைகள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்களிடம் பிரதமர் கோரிய போதே பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் மேலும் கூறியதாவது:
கொக்குளாய், கொக்குத்தொடுவாய், கரநாட்டுக்கேணி போன்ற எல்லைக் கிராம மக்களுக்கு சொந்தமான சுமார் 2500 ஏக்கர் வயல்காணிகள் மகாவலி திட்டத்தின் கீழ் வெலி ஓயா சிங்கள மக்களுக்கு பயிர்ச்செய்கை;காக பகிர்நது கொடுக்கப்பட்டுள்ளது.
முன்னைய அரசாங்கத்தால் தமிழ் மக்களிடமிருந்து பறித்தெடுக்கப்பட்ட இக்காணிகள் திருப்பிக்கொடுக்கவும் பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கரைதுறைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் நாயாறு கடற்கரைப்பகுதியில் 73 தென்னிலங்கை மீனவர்களுக்கு கடற்தொழிலில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்ட நிலையில் தற்போது 250க்கும் மேற்பட்டவர்கள் தொழிலில் ஈடுபடுகின்றனர். அத்துமீறி தொழிலில் ஈடுபடும் இவர்களை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படல் வேண்டும்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் இருக்கும் ஒரே தொழிற்சாலை ஒட்டுசுட்டான் ஓட்டுத்தொழிற்சாலை. இது தற்போது இயங்கவில்லை. 500க்கு மேற்பட்ட மக்களுக்கு தொழில் வாய்ப்பை வழங்கக்கூடிய இவ் ஓட்டுத் தொழிற்சாலையை மீளவும் இயங்கவைக்க பிரதமர் முயற்சி செய்ய வேண்டும்.
வடமாகாண சபைக்கான தலைமை அலுவலகமும், அமைச்சுக்களும் நிரந்தரமாக நிறுவப்படுவதற்கு பொருத்தமான இடமாக மாங்குளம் பிரதேசம் அனைத்து தரப்பினராலும் இனங்காணப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட போதிலும் யாழ்ப்பாணத்திலிருந்து இன்னமும் மாற்றியமைக்கப்பட நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
வட மாகாணத்திலுள்ள 5 மாவட்டங்களுக்கும் மத்திய பகுதியாக மாங்குளம் அமைந்துள்ளது. 5 மாவட்ட மக்களும் மாகாண சபையூடாக இலகுவான சேவைகளை சமநேரத்தில் பெற்றுக்கொள்ள வசியாக பொதுமக்களின் நலன்களை கருதி மாங்குளத்துக்கு மாற்றம் செய்ய பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வீதி அபிவிருத்தி திணைக்களத்துக்குரிய பிரதான வீதிகள், பிரதேச சபைகளுக்கூரிய உள்ளுர் வீதிகளின் திருத்தம் மாவட்டம் முழுவதும் மேற்கொள்ள இலகுவான போக்குவரத்து வசதிகள் செய்துகொடுக்க விஷேட நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்பட வேண்டும் என்றார்.
இக்கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் அமைச்சர்களான சுவாமிநாதன், ரிஷாத் பதியுதீன், பிரதியமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், ஹுனைஸ் பாரூக் மற்றும் அரசாங்க அதிபர், வடமாகாண ஆளுநர், பிரதேச செயலாளர்கள், முல்லைத்தீவு மாவட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள்
முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகளவான மக்களின் காணிகளில் இராணுவத்தினர் முகாமிட்டுள்ளனர்-எஸ்.வினோ எம்.பி.- Photos
Reviewed by NEWMANNAR
on
April 01, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
April 01, 2015
Rating:
.jpg)


No comments:
Post a Comment