அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மடுக்கரை ஆற்றில் மூழ்கி பாணந்துறை இளைஞன் மரணம்.-Photos


பாணந்துறையில் இருந்து மன்னார் மடுக்கரை பகுதிக்கு சுற்றுலா வந்து ஆற்றில் விளையாடிய இளைஞர் ஒருவர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளதாhக முருங்கன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 13 ஆம் திகதி பாணந்துறையில் இருந்து ஒரே குடும்ப உறவினர்கள் 21 பேர் மன்னார் சிலாபத்துரையில் உள்ள தமது உறவினர்களின் வீட்டிற்கு வந்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று முந்தினம் வியாழக்கிழமை (16) காலை குறித்த குழுவில் உள்ள 8 சிறுவர்கள் உற்பட ஆண்கள் பெண்கள் என 13 பேர் உற்பட 21 பேரூம் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட மடுக்கரை பகுதியில் உள்ள ஆற்றிற்கு சென்று ஆற்றங்கரையில் உணவு சமைத்து உண்டுள்ளனர்.

பின் அன்றைய தினம் மாலை 4.30 மணியளவில் 3 இளைஞர்கள் பிளாஸ்ரிக் டியூப் ஒன்றை ஆற்றில் போட்டு அதில் ஏறி பந்து விளையாடிக்கொண்டிருந்தனர்.

இதன் போது பந்து ஆற்றில் விழுந்த போது முஹமட் நஸீர்(வயது-18) என்ற இளைஞர் ஆற்றில் பாய்ந்து பந்தை எடுக்க முற்பட்ட போது குறித்த இளைஞர் பாய்ந்த பகுதி மிக ஆழமான இடமாக காணப்பட்டமையினால் ஆற்றில் தாண்ட நிலையில் நீரினால் இழுத்துச் செல்லப்பட்டார்.

உடனடியாக உறவினர்களுக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் அப்பகுதி மக்களும்,கடற்படையினரும் இணைந்து சுழி ஓடி தேடுதல்களை மேற்கொண்டனர்.எனினும் குறித்த இளைஞன் மீட்கப்படவில்லை.

மறு நாள் நேற்று வெள்ளிக்கிழமை(17) காலை முதல் நூற்றுக்கணக்கானவர்கள் இணைந்து தேடிய போதும் குறித்த இளைஞர் மீட்கப்படவில்லை.இந்த நிலையில் நேற்று மாலை 4.30 மணியளவில் குறித்த ஆற்றில் மூழ்கி உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார்.சம்பவ இடத்திற்கு வந்த முருங்கன் பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டதோடு சடலத்தை மன்னார் வைத்தியசாலையில் ஒப்படைக்க உத்தரவிட்டார்.

சடலம் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு சடலத்தை வைத்தியசாலையில் பார்வையிட்ட திடீர் மரண விசாரனை அதிகாரி சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார்.

இந்த நிலையில் சடலம் உடனடியாக பாணந்துறைக்கு கொண்டு செல்லப்பட்டது.மேலதிக விசாரனைகளை முருங்கன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.









மன்னார் மடுக்கரை ஆற்றில் மூழ்கி பாணந்துறை இளைஞன் மரணம்.-Photos Reviewed by NEWMANNAR on April 18, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.