மன்னார் அச்சங்குளம் கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்ட ட தூய சூசையப்பர் ஆலயம் மன்னார் ஆயரினால் திறந்து வைப்பு.
மன்னார் நானாட்டான பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட  அச்சங்குளம் கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்ட தூய சூசையப்பர் ஆலயம் மன்னார் மறைமாவட்ட ஆயர் அதி வணக்கத்திற்குரிய இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை அவர்களினால் இன்று (19) ஞாயிற்றுக்கிழமை காலை அபிசேகம் செய்யப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.
இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7.15 மணியளவில் மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை அவர்களினால் அபிசேகம் செய்து திறந்து வைக்கப்பட்ட நிலையில் ஆயருடன் இணைந்து மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட் தந்தை அன்ரனி விக்டர் சோசை,நானாட்டான் பங்குத்தந்தை அருட்தந்தை அருள்ராஜ் குரூஸ் ஆகியோர் இணைந்து கூட்டுத்திருப்பலியை ஒப்புக்கொடுத்தனர்.
அதனைத்தொடர்ந்து மன்னார் மறைமாவட்ட ஆயரின் 75 ஆவது பிறந்த தினத்தை அச்சங்குளம் தூய சூசையப்பர் ஆலயத்தில் குருக்கள் மற்றும் பங்கு மக்கள் ஆகியோர் இணைந்து கொண்டாடினர்.
இதன் போது ஆயர் கேக் வெட்டி பிறந்த நாளை சிறப்பித்தார்.குறித்த நிகழ்வில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்,வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன் மற்றும் உள்ளுராட்சி மன்ற பிரதி நிதிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
மன்னார் அச்சங்குளம் கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்ட ட தூய சூசையப்பர் ஆலயம் மன்னார் ஆயரினால் திறந்து வைப்பு.
 Reviewed by NEWMANNAR
        on 
        
April 19, 2015
 
        Rating:
 
        Reviewed by NEWMANNAR
        on 
        
April 19, 2015
 
        Rating: 
       Reviewed by NEWMANNAR
        on 
        
April 19, 2015
 
        Rating:
 
        Reviewed by NEWMANNAR
        on 
        
April 19, 2015
 
        Rating: 
















 
 
 

 
.jpg) 
 
 
 
 
 
 
.jpg) 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment