13 ஆவது திருத்தம், ஆசன ஒதுக்கீடு தொடர்பாக கலந்துரையாட கூடியது தமிழரசுக்கட்சி
தற்போதைய அரசியல் சூழ்நிலையில் பல்வேறு தீர்மானங்களை எடுப்பதற்காக இலங்கை தமிழரசுக்கட்சி வவுனியாவில் இன்று கூடியுள்ளது. கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில்10.30 மணியளவில் ஆரம்பமான இக் கூட்டத்தில் 13 ஆவது திருத்தச்சட்டத்தின் ஊடாக தமிழருக்குரிய தீர்வுக்கான வழிவகைகள், எதிர்வரும் தேர்தலில் கூட்டமைப்பு கட்சிகளுக்கடையிலான ஆசன ஒதுக்கீடுகள் தொடர்பிலும் தீர்மானிக்கப்படலாம் எனவும் தமிழரசுக்கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்திருந்தார். இதன்போது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், எம். சுமந்திரன், துரைராசசிங்கம், உட்பட மத்தியகுழுவில் அங்கம் வகிக்கும் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
13 ஆவது திருத்தம், ஆசன ஒதுக்கீடு தொடர்பாக கலந்துரையாட கூடியது தமிழரசுக்கட்சி
Reviewed by Author
on
May 04, 2015
Rating:

No comments:
Post a Comment