கனடாவிலேயே விலை அதிகமான உல்லாச வீடு
கனடாவின் மிக சிறந்த பனிச்சறுக்கு அடையாள சின்னம் எதுவென உலகில் எவரை கேட்டாலும் றூளைவடநச என்றே கூறுவர். இப்பகுதியில் சராசரியாக 33-அடிகள் பனிபொழிவு காணப்படும். இது மட்டுமின்றி கனடாவிலேயே மிக அழகானதும் செழிப்பு மிக்கதுமான விலை மதிப்பு மிக்க உல்லாச வீடும் அங்குதான் உள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது. வன்கூவரில் இருந்து 170கிலோ மீற்றர் தொலைவில் ளுநய-வழ-ளுமல நெடுஞ்சாலையில் ஐந்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் அமைந்துள்ள உல்லாச வீடு 22-மில்லியன் டொலர்கள் பெறுமதி மிக்கதென பட்டியல் இடப்பட்டுள்ளது. கனடாவின் அதி-உயர் விலைமதிப்புள்ள வீடு இது என கூறப்பட்டுள்ளது. 9800-சதுர-அடிகளை கொண்டது. 10-படுக்கை அறைகள். ஒன்பது குளியல் அறைகள் கொண்டதுடன் 3-படுக்கை அறைகள் கொண்ட விருந்தினர் வீட்டையும் உள்ளடக்கியுள்ளது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
கனடாவிலேயே விலை அதிகமான உல்லாச வீடு
Reviewed by Author
on
May 06, 2015
Rating:
Reviewed by Author
on
May 06, 2015
Rating:


No comments:
Post a Comment