காற்று மாசுபாட்டால் 35 சதவீத பிள்ளைகளின் நுரையீரல் பாதிப்பு
இந்தியாவில் நான்கு நகரங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்திய நகரங்களில் படிக்கும் பாட சாலை பி;ள்ளைகளில் 35 சதவீதத்தினர் நுரை யீரல் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர் என தெரிவிக் கப்பட்டு உள்ளது. அவற்றில் டெல்லி நகரமா னது மோசமான ஆரோக்கியம் கொண்டவர்கள் என்ற பிரிவின் கீழ் 40 சதவீத பிள்ளைகளை கொண்டு அதிக பாதிப்பு அடைந்த நகரமாக உள் ளது. இது கொல்கத்தா நகரில் 35 சதவீதம், பெங் க@ரில் 36 சதவீதம் மற்றும் மும்பை நகரில் 27 சதவீதம் என்ற அளவிற்கு பாதிப்பு கொண்ட பிள்ளைகளை கொண்டுள்ளது. காற்று மாசுபாடா னது பிள்ளைகளின் சுவாச திறனை பாதிப்பதை கண்டறியும் வகையில் நாட்டின் அனைத்து பகுதி களில் இருந்தும் 8 முதல் 14 வயது வரையி லான 2 ஆயிரம் பாடசாலை மாணவர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. இந்தியாவில் சுத்தமான காற்று இயக்கத்தின் ஒரு பகுதியாக உலக ஆஸ்துமா தினத்தை முன்னிட்டு இந்த ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது. உலகில் அதிகம் மாசுபட்டுள்ள 20 நகரங்களில் 13 இந்தியாவில் உள்ளது என சமீபத்திய உலக சுகாதார அமைப்பின் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. சுற்றுப்புற சு+ழல் நிபுணரான சுபாஷ் தத்தா கூறும்போது குறைவான வீதி இட வசதி கொண்டுள்ள கொல்கத்தா நகரின் நிலை மிக மோசமாக உள்ளது. இதனால் அதிக வாகன நெருக்கடி ஏற்படுகிறது. அதனுடன் சுத்தமான எரிபொருள் கொண்ட வாகனங்கள் பற்றாக்குறையும் உள்ளது. எல்.பி.ஜp. ஆட்டோக்கள் குறைவாக உள்ளது. சுத்தமான எரிபொருள் பயன்பாட்டு வாகனங்கள் நமக்கு அதிகமாக தேவை. பொது மக்களுக்கான பழைய போக்குவரத்து வாகனங்கள் அதிக புகையை வெளியிடுகின்றன என்றும் அவர் கூறியுள்ளார். குழந்தைகள் இடையே எரிச்சலூட்டுகின்ற வகையில் வறட்டு இருமல் பாதிப்பு அதிகரித்து வருகின்றது என டொக்டர் மைத்ரா கூறியுள்ளார். காற்று மாசுபாட்டால் கிராமங்களை விட நகரங் களில் நுரையீரல் பாதிப்படையும் வியாதி இருப் பதற்கான வாய்ப்பு மிக அதிகமாக உள்ளது என்றும் டொக்டர் பார்த்தசாரதி என்பவர் கூறியுள்ளார்.
காற்று மாசுபாட்டால் 35 சதவீத பிள்ளைகளின் நுரையீரல் பாதிப்பு
Reviewed by Author
on
May 06, 2015
Rating:

No comments:
Post a Comment