தொடரைக் கைப்பற்றியது இலங்கை அணி
இலங்கை ஏ மற்றும் பாகிஸ்தான் ஏ அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகளைக் கொண்ட உத்தியோபூர்வமற்ற ஒருநாள் தொடரை இலங்கை அணி 2க்கு 1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இரு அணிகளுக்கும் இடையில் நேற்று கொழும்பு ஆர் .பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்ற ஒரு நாள் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை ஏ அணி 47.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 277 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
துடுப்பாட்டத்தில் இலங்கை ஏ அணி சார்பில் குசல் ஜனித் பெரேரா 87 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். கடந்த இரண்டு போட்டிகளிலும் சதம் அடித்திருந்த குசல் பெரேரா இப்போட்டியில் 13 ஓட்டங்களால் சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
இதன் மூலம் தொடர்ச்சியாக மூன்றாவது சதம் வாய்ப்பு இல்லாமல் போனது.
இவரைத் தவிர, ஷெஹான் ஜயசூரிய 67 ஓட்டங்களையும் , கித்ருவன் வித்தானகே 29 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றுக்கொடுத்தனர். பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் ஏ அணி 48.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 281 ஓட்டங்களைப் பெற்று 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.
ஏற்கனவே நடைபெற்ற 2 போட்டிகளிலும் இலங்கை ஏ அணி வெற்றிபெற்றதனால் 3 போட்டிகளைக் கொண்ட இத்தொடரை இலங்கை ஏ அணி 2க்கு 1 என்ற கணக்கில் வெற்றிபெற்றது.
தொடரைக் கைப்பற்றியது இலங்கை அணி
Reviewed by Author
on
May 03, 2015
Rating:

No comments:
Post a Comment