6024 பேருக்கு ஆசிரியர் நியமனம் 7ஆம்,8ஆம் திகதிகளில் வழங்க ஏற்பாடு
தமிழ் பாடசாலைகளுக்கு 6,024 ஆசிரியர் நியமனங்கள் 7ஆம் 8ஆம் திகதிகளில் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் மற்றும் ராஜாங்க கல்வி அமைச்சர் வி.இராதாகிருஷ்ணன் ஆகியோரால் வழங்கப்படவுள்ளன.
நியமனம் வழங்கும் வைபவம் இசுருபாய, கல்வி அமைச் சின் கட்டடத் தொகுதி முன்றலில் அமைக்கப்பட்டுள்ள விஷேட மேடையில் வைத்து வழங்கப்படும்.
ஸ்ரீபாத கல்வியியல் கல்லூரி உட்பட ஏனைய கல்வியியல் கல்லூரிகளில் பயிற்சி பெற்று வெளியேறிய 3,000 பேருக்கு எதிர்வரும் 7ஆம் திகதி வியாழக்கிழமை நியமனம் வழங்கப்படும்.
2014ஆம் ஆண்டு டிசம்பர் 28ஆம் திகதி நடைபெற்ற போட்டிப் பரீட்சையில் சித்தியெய்திய 3024 பேருக்கும் 8ஆம் திகதி வெள்ளிக்கிழமை நியமனம் வழங்கப்படும் என்று இராதாகிருஷ்ணன் வீரகேசரிகுத் தெரிவித்தார்.
6024 பேருக்கு ஆசிரியர் நியமனம் 7ஆம்,8ஆம் திகதிகளில் வழங்க ஏற்பாடு
Reviewed by Author
on
May 03, 2015
Rating:

No comments:
Post a Comment