அண்மைய செய்திகள்

recent
-

புதிய ஆட்சி தமிழர்களுக்கு நம்பிக்கை ஒளிக்கீற்றை ஏற்படுத்தியுள்ளது : இல.கணேசன் தெரிவிப்பு


தற்­போது ஏற்­பட்­டுள்ள ஆட்சி மாற்­ற­மா­னது தமி­ழர்­க­ளுக்கு நம்­பிக்கை ஒளிக்­கீற்றை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது என தெரி­வித்­துள்ள பார­தீய ஜனதாக் கட்­சியின் நிறை­வேற்­றுக்­குழுஉறுப்­பினர் இல.கணேசன் சிறந்த எதிர்­காலம் காணப்­ப­டு­வ­தா­கவும் அதற்­காக அனைத்து தமி­ழர்­களும் ஒன்­று­பட்டு செயற்­பட வேண்­டு­மெ­னவும் தெரி­வித்தார். மீள்­கு­டி­யேற்றம், புனர்­நிர்­மானம் மற்றும் இந்­து­மத அலு­வல்கள் அமைச்சர் டி.எம்.சுவா­மி­நா­த­னுக்கும் பார­தீய ஜனதாக் கட்­சியின் நிறை­வேற்­றுக்­குழு உறுப்­பினர் இல.கணேசன் பா.ஜ.கா.வின் தமிழ்­நாட்டு பிராந்­தி­யத்­தி­யத்­திற்­கான பிரதி தலைவர் சக்­க­ர­வர்த்தி ஆகியோர் தலை­மை­யி­லான குழு­வி­ன­ருக்­கு­மி­டை­யி­லான சந்­திப்­பொன்று நேற்­றைய தினம் கொழும்பில் அமைந்­துள்ள அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்­பெற்­றது.

 இச்­சந்­திப்பில் அமைச்சின் செய­லாளர் ரஞ்­சினி நட­ரா­ஜ­பிள்ளை, உள்­ளிட்ட முக்­கி­யஸ்­தர்கள் கலந்து கொண்­டனர். இச்­சந்­திப்பின் பின்னர் ஊட­கங்­க­ளுக்கு கருத்து வௌியி­டு­கை­யிலே இல.கணேசன் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் தொடர்ந்தும் தெரி­விக்­கையில், நீண்ட இடை­வௌியின் பின்னர் இலங்­கைக்கு வருகை தந்­துள்ளேன். தற்­போது ஏற்­பட்­டுள்ள ஆட்சி மாற்றம் இலங்கை வாழ் தமி­ழர்கள் மத்­தியில் நம்­பிக்கை ஔிக்­கீற்றை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. கம்பன் கழக விழாவில் பங்­கேற்­ப­தற்­காக வருகை தந்­தி­ருந்­தாலும் கடந்த நான்கு நாட்­க­ளாக நான் இங்கு தங்­கி­யி­ருக்­கின்றேன்.

 பல்­ல­வேறு தரப்­பி­னர்­க­ளு­டனும் சந்­திப்­புக்­களை நடத்­தி­ய­துடன் அவர்­களின் எதிர்­பார்ப்­புக்கள் தற்­போ­தைய நிலை­மைகள் தொடர்­பாக கலந்­து­ரை­யா­ட­டி­யு­முள்ளேன். அத­ன­டிப்­ப­டை­யிலே அவர்கள் புதிய அர­சாங்கம் தொடர்பில் நம்­பிக்­கை­யான கருத்­துக்­களை வௌியிட்­டி­ருக்­கின்­றார்கள். இலங்கை அர­சாங்கம் தமி­ழர்­க­ளுக்கு எவ்­வா­றன நலத்­திட்­டங்­களை முன்­னெ­டுப்­ப­தற்­கான முயற்­சி­களை மேற்­கொள்­கின்­றதோ அவை அனைத்­திற்கும் உறு­து­ணை­யாக இருந்து முழு­மை­யான பங்­க­ளிப்­பு­களை வழங்க இந்­திய அர­சாங்கம் தயா­ராக உள்­ளது. குறிப்­பாக இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி வௌிவி­வ­கார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகிய இருவரும் அக்கருத்தை தௌிவாக குறிப்பிட்டிருக்கின்றார்கள். 

அந்த வகையில் தமிழர்களுக்கு நல்லதொரு எதிர்காலம் இருக்கின்றது எனக் கருதுகின்றேன். தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட்டு ஒட்டுமொத்த இலங்கையின் முன்னேற்றத்துக்காக பாடுபடவேண்டும் என்றார்.

புதிய ஆட்சி தமிழர்களுக்கு நம்பிக்கை ஒளிக்கீற்றை ஏற்படுத்தியுள்ளது : இல.கணேசன் தெரிவிப்பு Reviewed by Author on May 06, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.