குவைத் மசூதியில் தற்கொலைப்படைத் தாக்குதல்: 27 பேர் பலி
குவைத்தின் கிழக்கு பகுதியில் உள்ள அல் சாதிக் மசூதியில் நடத்தப்பட்ட தற்கொலைப்படைத் தாக்குதலில் 27 பேர் பலியாகியுள்ளனர்.
நேற்று (26) ஷியா பிரிவு முஸ்லிம்கள் 2000 பேர் வரையில் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது தற்கொலைப்படை தீவிரவாதி ஒருவர் உடலில் வெடிகுண்டுகளைக் கட்டிக்கொண்டு மசூதிக்குள் நுழைந்து அவற்றை வெடிக்க வைத்துள்ளார்.
இந்த குண்டுவெடிப்பில் ஒரு குழந்தை உட்பட 27 பேர் உடல் சிதறி உயிரிழந்ததுடன் 200ற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
இந்த தற்கொலைப்படைத் தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துடன் இணைந்து செயற்படும் அல் நாத்ஜ் பிராவின்ஸ் என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்புக் கோரியுள்ளது.
குவைத் மசூதியில் தற்கொலைப்படைத் தாக்குதல்: 27 பேர் பலி
Reviewed by NEWMANNAR
on
June 27, 2015
Rating:

No comments:
Post a Comment