கல்முனையில் மிகவும் பழமைவாய்ந்த கோயில் சிலை உடைப்பு: திட்டமிட்ட செயல் அரியம் எம்.பி
மகிந்த காலத்திலும், மைத்திரி காலத்திலும் வணக்கஸ்தலங்கள் குறிப்பாக இந்து ஆலயங்கள் திட்டமிட்டு உடைக்கப்பட்டதும், சூரையாடப்பட்டதும் தொடர்ந்த வண்ணமே உள்ளது.
அதனொரு வெளிப்பாடே நேற்றுமுன்தினம் இரவு கல்முனையில் மிகவும் பழமைவாய்ந்த ஆலயமாகத்திகளும் தரவைப்பிள்ளையார் ஆலயத்தின் முகப்பில் உள்ள சிலைகள்
உடைக்கப்பட்டிருப்பது நன்கு திட்டமிட்ட செய்றபாட்டின் ஒரு அங்கமாகும்.
சிலையை உடைத்தவரை பொதுமக்களின் உதவியுடன் பொலிசார் கைது செய்திருக்கின்றார்கள். ஆனால் தற்போது அவர் ஒரு மனநோயாளி என சோடிக்கப்படுகின்றது
இவ்வாறான கீழ்தரமான செயற்பாடுகளை செய்து விட்டு குற்றவாளிகளை தப்பிக்க வைக்கும் செயற்பாடுகளை யாரும் செய்ய முன்வரக்கூடாது.
தேர்தல் காலம் என்பதனால் தமிழ், முஸ்லிம் உறவில் குரோதத்தன்மையினைளுயும் இன விரிசலை ஏற்படுத்துவதற்காக குறிப்பிட்டவர்களின் திட்டமிட்ட செயற்பாட்டின்
வடிவமாகவே இருக்கக்கூடும் என்ற எண்ணமும் தோன்றுகின்றது.
எது எவ்வாறு இருப்பினும் பொலிசார் இந்த விடயத்தில் காத்திரமாக செயற்பட்டு குற்றம் செய்தவர்களுக்கான தண்டனையை பெற்றுக்கொடுப்பதுடன், இனிமேல் இவ்வாறான சம்பவங்கள் ஏற்படாத வண்ணம் பார்த்து செயற்பட வேண்டும்.
த.தே.கூட்டமைப்பானது இவ்வாறான மிகவும் மோசமான செயற்பாட்டிற்கு எப்போதும் எதிரானவர்களே. எந்த மதத்தினை சார்ந்த வணக்கஸ்த்தலங்களாக இருந்தாலும் அவை பாதுகாக்கப்பட வேண்டியது அனைவரது பொறுப்புமாகும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் மேலும் கூறினார்.
கல்முனையில் மிகவும் பழமைவாய்ந்த கோயில் சிலை உடைப்பு: திட்டமிட்ட செயல் அரியம் எம்.பி
Reviewed by NEWMANNAR
on
June 27, 2015
Rating:
No comments:
Post a Comment