கத்தியை காட்டி மிரட்டியவர்களை கத்தியே விரட்டிய சிறுவன்: வீரதீர விருது கொடுத்த பொலிசார்
பிரித்தானியாவில் தனது தாயிடம் கத்தியை காட்டி மிரட்டியவர்களை துணிச்சலாக விரட்டிய சிறுவனுக்கு வீரதீர விருது அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு பிரித்தானியாவின் பர்மிங்காம் பகுதியை சேர்ந்த முஹம்மது அலி என்ற ஆறு வயது சிறுவன் ஒருவன் சம்பவத்தன்று தனது வீட்டின் மாடிப்பகுதியில் உள்ள அறையில் தூங்கிகொண்டிருந்தான்.
இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் முன்வாசல் கதவை உடைத்து முகமூடி அணிந்த ஏழெட்டு கொள்ளையர்கள் பயங்கர ஆயுதங்களுடன் வீட்டின் உள்ளே புகுந்தனர்.
பின்னர், வீட்டில் உள்ள நகைகளை எல்லாம் தங்களிடம் ஒப்படைக்கவில்லை என்றால் குழந்தையை கொன்றுவிடுவோம் என்று கூறி அவனது தம்பியின் கழுத்தில் கத்தியை வைத்துள்ளனர்.
இதைக்கண்டு ஆத்திரமடைந்த முஹம்மது அலி, தனது தாயை சூழ்ந்திருந்த கொள்ளையர்களிடன் தனது தாய் மற்றும் தம்பியை விட்டுவிடுமாறு வெறி கொண்டவனாக மாறி,மாறி ஆவேசமாக கத்தியுள்ளான்.
இதனால் அதிர்ச்சியடைந்த கொள்ளையர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். இந்த சம்பவம் ஊடகங்கள் மூலம் பரவ தொடங்கியது.
இந்நிலையில், கொள்ளையர்களிடம் வீரமாகவும் ஆவேசமாகவும் செயல்பட்டு தனது குடும்பத்தை காப்பாற்றிய முஹம்மது அலிக்கு வீரதீர விருது வழங்க வெஸ்ட் மிட்லேன்ட்ஸ் பொலிசார் முடிவு செய்தனர்.
இதையடுத்து நேற்று போலீஸ் அதிகாரிகள் அவனுக்கு விருது அளித்து, வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
கத்தியை காட்டி மிரட்டியவர்களை கத்தியே விரட்டிய சிறுவன்: வீரதீர விருது கொடுத்த பொலிசார்
Reviewed by Author
on
June 24, 2015
Rating:

No comments:
Post a Comment