தேசிய ரீதியில் சாதனை படைத்த மன்/ தட்சனாமருதமடு ம. வி
மாத்தறையில் கடந்த 22 ஆம் திகதி தொடக்கம் 25.09.2025 வரை நடைபெற்ற அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தைக் கொண்டோ தற்காப்பு கலை போட்டியில் மன்னார் மடு கல்வி வலயத்திற்குட்பட்ட தட்சனாமருதமடு ம.வி மாணவி யோ.சுடர்மதி 18 வயதிற்குட்பட்ட 52 kg-55 kg நிறைப்பிரிவில் போட்டியிட்டு மூன்றாம் இடத்தைப் பெற்று வெண்கல பதக்கத்தை தனதாக்கி தேசிய ரீதியில் சாதனை படைத்துள்ளார்.
மேலும் குறித்த இம்மாணவி கடந்த மாதம் யாழ்/ துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்ற மாகாணமட்ட பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுனர் போட்டிகளில் 100 மீற்றர் சட்டவேலி, மற்றும் 400 மீற்றர் சட்டவேலி ஓட்டங்களில் 1ம் இடங்களைப் பெற்று கடந்த வருடம் இவ்விரு போட்டிகளிலும் குறித்த மாணவி வைத்த சாதனையை இவ்வருடம் குறித்த இம் மாணவியே முறியடித்து சாதனை படைத்துள்ளது டன் 200m ஓட்டத்தில் இரண்டாம் இடத்தையும் பெற்று இம்மாணவி கல்வியிலும் விளையாட்டிலும் சிறந்து விளங்குகின்றார்.
மேலும் குறித்த மாகாணமட்ட போட்டியில் 18 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் எஸ்.அபிஷா 400m சட்டவேலி ஓட்டத்தில் 2 ம் இடத்தையும் 400m ஓட்டத்தில் 3ம் இடத்தையும் முப்பாய்ச்சல் போட்டியில் 4ம் இடத்தையும் பெற்றுள்ளதுடன் 18 வயது பெண்கள் பிரிவு 400m அஞ்சலோட்டத்தில் 1ம் இடத்தையும் பெற்றுக் கொண்டுள்ளார்.
அத்துடன் 20 வயது பெண்கள் பிரிவில் ஈட்டி எறிதல் போட்டியில் கே. கோனிலா 3ம் இடத்தையும் பெற்றுள்ளதுடன் முல்லைத்தீவில் கடந்த 21.07.2025-24..07.2025 வரை நடைபெற்ற மாகாணமட்ட தைக்கொண்டோ போட்டியில் 18 வயது ஆண்கள் பிரிவில் 51kg-55kg நிறையில் போட்டியிட்ட A. ஜெனஸ்ரின் 1ம் இடத்தினையும் 18 வயது பெண்கள் பிரிவில் 52kg-55kg பிரிவில் போட்டியில் மாணவி யோ. சுடர்மதி 1ம் இடத்தையும், 42kg-44kg பிரிவில் போட்டியிட்ட S.அபிஷா 1 ம் இடத்தையும்,52kg-55kg பிரிவில் R.அபிசா மற்றும் S.சுரவி 3 ம் இடத்தையும்,20 வயது பெண்கள் பிரிவில் 49kg-52kg நிறையில் K.கோணிலா 1 ம் இடத்தையும்,P. தமிழினி மற்றும் N.பிரியதர்சினி 3 ம் இடத்தையும் பெற்றுள்ளனர்.
மேலும் இப்பாடசாலையின் பெண்கள் அணி மாகாண ரீதியில் 57 புள்ளிகளை பெற்று 5ம் இடத்தினையும் 18 வயது பெண்கள் அணி மாகாண ரீதியில் 52 புள்ளிகளை பெற்று 1ம் இடத்தையும் பெற்றுள்ளதுடன் மாகாண ரீதியில் தைக்கொண்டோ மற்றும் மெய்வல்லுநர் போட்டிகள் உள்ளடங்கலாக7 தங்கப் பதக்கங்களையும், 2 வெள்ளி பதக்கங்களையும்,6 வெண்கல பக்கங்களையும் பெற்று வலயத்திற்கும் மாகாணத்திற்கும் இப்பாடசாலையானது பெருமை சேர்த்து கொடுத்துள்ளதுடன் இம் மாணவர்களுக்கு அதிபர் திருமதி பவுல் மெசியாவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலுடன் உடற்கல்வி ஆசிரியர் மெலன் பீரிஸ் பயிற்சிகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment