செவ்வாய் கிரகத்தில் பிரமிடு: வீடியோ வெளியிட்ட நாசா
செவ்வாய் கிரகத்தில் பிரமிடு இருப்பது போன்ற புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது.
பூமியில் இருந்து 57 கோடி கிலோ மீற்றர் தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வது குறித்து ஆராய நாசா சார்பில் கியூரியாசிட்டி ரோவர் விண்கலம் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.
அது தொடர்ந்து செவ்வாய் கிரகத்தின் புகைப்படங்களை அனுப்பி வருகிறது.
இந்நிலையில் கடந்த மே மாதம் 7ஆம் திகதி, கியூரியாசிட்டி அனுப்பிய புகைப்படம் ஒன்றில் பாறைகளுக்கு இடையே எகிப்தில் இருப்பதை போன்ற பிரமிடு போன்ற தோற்றமுடைய ஒரு அமைப்பு இருந்துள்ளது.
இது குறித்து வேற்று கிரக உயிரினங்கள் குறித்து ஆய்வு செய்துவரும் ஆய்வாளர்கள் கூறியதாவது, பண்டைய நாகரீகத்தினர் கட்டிய பிரமிடைப்போல அது மிகவும் நேர்த்தியாக கட்டப்பட்டுள்ளது.
அது ஒளியின் தந்திரமாக தெரியவில்லை ஒரு அறிவார்ந்த கட்டிடமாக உள்ளது.இந்த பிரமிடு கார் அளவில் உள்ளது.ஆனால் பெரிய அமைப்பு முறை செவ்வாய்யின் நிலப்பரப்புக்கு அடியில் இருக்கலாம்.
இதனால் பண்டைய எகிப்து நாகரீகத்தினர் செவ்வாய் கிரகத்தில் வாழ்ந்து இருக்ககூடும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
செவ்வாய் கிரகத்தில் பிரமிடு: வீடியோ வெளியிட்ட நாசா
Reviewed by Author
on
June 24, 2015
Rating:

No comments:
Post a Comment