வங்கதேச ரசிகர்களால் தாக்கப்பட்ட சச்சின் ரசிகர்! நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய ரெய்னா, கோஹ்லி
வங்கதேசத்தில் தாக்கப்பட்ட சச்சினின் ரசிகரை இந்திய வீரர்களான கோஹ்லி, ரெய்னா நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளனர். மிர்புரில் நடந்த 2வது ஒருநாள் போட்டியின் போது, சச்சினின் தீவிர ரசிகர் மற்றும் இந்தியாவின் ஆதரவாளரான சுதிர் கெளதம் சென்ற ஆட்டோவை வழிமறைத்து வங்கதேச ரசிகர் சிலர் தாக்கினர். இதில் அவர் காயம் அடைந்தார். இது தொடர்பாக சுதிர் கெளதம் பொலிசில் புகார் ஏதும் அளிக்காத நிலையிலும், கடைசி போட்டியை காண அவருக்கு பொலிஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில் முஷாஃபர்பூரில் இந்திய வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்ட மைதானத்திற்கு சுதிர் கெளதம் சென்றுள்ளார். அவரை இந்திய அணியின் துணை அணித்தலைவர் விராட் கோஹ்லி, சுரேஷ் ரெய்னா, அஸ்வின் சந்தித்து தாக்குதல் பற்றி கேட்டறிந்தனர். மேலும், கோஹ்லி தன்னுடையை மொபல் நம்பரை அவரிடம் கொடுத்து எப்போது வேண்டுமானாலும் தன்னை தொடர்பு கொள்ளுமாறு கூறியுள்ளார்.
வங்கதேச ரசிகர்களால் தாக்கப்பட்ட சச்சின் ரசிகர்! நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய ரெய்னா, கோஹ்லி
Reviewed by Author
on
June 27, 2015
Rating:

No comments:
Post a Comment