அண்மைய செய்திகள்

recent
-

வரலாற்றில் முதல் முறையாக வண்ண மாளிகையாக ஜொலித்த வெள்ளை மாளிகை

<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br /></div>
அமெரிக்காவின் அனைத்து மாகாணங்களிலும் ஓரினச்சேர்க்கை திருமணத்துக்கு சட்டப்பூர்வமாக அனுமதியளிக்கப்படுகிறது என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளதை அந்நாட்டு மக்கள் வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர்.
மேலும் அமெரிக்காவின் அரசியலமைப்பின் 14வது திருத்தத்தின் படி அனைத்து ஓரினச்சேர்க்கையாளர்களுக்கும் ஓரின திருமணம் செய்வதற்கு உரிமையுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஓரின திருமணத்துக்கு தடை விதித்துள்ள 14 மாகாணங்கள் தங்களது தடையை விலக்கிகொள்ள கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளன.

மேலும் அமெரிக்காவில் உள்ள 50 மாகாணங்களிலும் தற்போது ஓரினச்சேர்க்கை திருமணம் சட்டப்பூர்வமானதாக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை கேட்ட நீதிமன்றத்தின் முன் திரண்டிருந்த ஏராளமான ஓரினச்சேர்க்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

இது குறித்து ஜனாதிபதி ஒபாமா தனது டுவிட்டரில் , இந்நாள் வரலாற்றில் ஒரு சிறப்பான நாள், நமது சம உரிமை பயணத்தில் இது முக்கியமான ஒரு படி என்று கருத்து வெளியிட்டுள்ளார்.

வெள்ளை மாளிகையின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் தளத்தில் இடம்பெற்ற வெள்ளை மாளிகை வண்ணமும் ஏழு நிறங்களாக மாற்றப்பட்டிருந்தது.

இதனை பல மாகாணங்களி்ல் பலரும் கொண்டாடினர். இதற்கு தமது ஆதரவை தெரிவிக்கும் வகையில் அதிபர் ஒபாமா வசிக்கும் வெள்ளை மாளிகை வண்ண மாளிகையாக காட்சி அளித்தது.

வானவில் போன்ற நிறம் கொண்டதாக மின்னொளி அலங்காரத்தில் வெள்ளை வண்ணமயமாக ஜொலித்தது.

அமெரிக்க வரலாற்றில் வண்ணமயத்தில் ஜொலித்தது இதுவே முதன் முறை ஆகும்.


வரலாற்றில் முதல் முறையாக வண்ண மாளிகையாக ஜொலித்த வெள்ளை மாளிகை Reviewed by Author on June 27, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.