சிறுமிகளுடன் பாலுறவு கொள்வதை விரும்பும் பிரித்தானியா ஆண்கள்: அதிர்ச்சி தகவல்
இங்கிலாந்தில் சுமார் 750,000 ஆண்கள் சிறுமிகளுடன் பாலுறவு கொள்வதையே விரும்புகின்றனர் என சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
இங்கிலாந்து நாட்டின் தேசிய குற்றப்பிரிவு நடத்திய ஆய்வில், நாட்டில் 35 ஆண்களில் ஒரு ஆண், பெண் குழந்தைகளிடம் தவறாக நடந்துக் கொள்ளும் ஆபத்தை எதிர்கொண்டு உள்ளனர்.
இதில் மற்றொரு கொடூரமாக சுமார் 250,000 ஆண்கள், பருவம் அடையாத சிறுமிகளால் ஈர்க்கப்பட்டு இருக்கலாம் என்று இங்கிலாந்து குற்றப்பிரிவு அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக இங்கிலாந்து தேசிய குற்றப்பிரிவு துணை பொது இயக்குநர் பில் கோர்ம்லே கூறியதாவது, பாலியல் துஷ்பிரயோகங்களில் ஈடுபடுபவர்கள் அதிக அளவில் உள்ளனர்.
இந்த குற்றங்களில் ஈடுபடுபவர்களை கைது செய்து சிறையில் அடைத்தாலும், அவர் அதில் இருந்து மீண்டும் திரும்பி வருவதற்கு இந்த தண்டனை உதவி செய்யாது, எனவே பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டும்.
சிறுமிகள் பேஸ்புக் மற்றும் சமூக வலைதளங்கள் வழியாக ஆண்களிடம் பேசும்போதும் இதுபோன்ற இன்னல்கள் வரக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிறுவர்கள் போன்று பேசி ஏமாற்றுவர்களிடம் இருந்து தப்பித்துக்கொள்ள விழிப்புணர்வை ஏற்படுத்த மேம்பாட்டு வழிமுறைகளை அரசு செய்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், பொலிஸ் அதிகாரிகள் தரப்பில் நடத்தப்பட்ட ஆய்வில், 2012-ம் ஆண்டில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் ரீதியிலான தொல்லை வழக்கு 66,120 ஆக இருந்தது.
அதுவே 2015-ம் ஆண்டில் என்பது 113,291 ஆக கணிக்கப்பட்டு உள்ளது. சுமார் 165 சதவீதம் உயர்ந்துள்ளது என தெரியவந்துள்ளது.
இங்கிலாந்தில் பெண் குழந்தைகள் தொடர்பாக ஆபாச படங்களை கூகுள் தேடலில், தேடப்படுவது என்பது கடந்த ஆண்டில் மட்டும் அதிகரித்துள்ளது.
பிரித்தானியாவில் மட்டும் சுமார் 3 மில்லியன் முறை இதுபோன்ற தேடல்கள் நடந்துள்ளது.
கூகுள் தேடலில் பாதிபேர் இதனையே தேடி உள்ளனர் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்தில் பள்ளிகள், நீதிமன்றம், காவல் நிலையம், குழந்தைகள் பாதுகாப்பு மையம் என பல்வேறு நடவடிக்கை செயல்படுத்தப்பட்டு உள்ளநிலையில், இதுதொடர்பான பிரச்சனையில் வெளியாகி உள்ள அளவானது எங்களை மிகவும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்று இங்கிலாந்து உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
சிறுமிகளுடன் பாலுறவு கொள்வதை விரும்பும் பிரித்தானியா ஆண்கள்: அதிர்ச்சி தகவல்
Reviewed by Author
on
June 22, 2015
Rating:

No comments:
Post a Comment