வரலாறு படைத்த வங்கதேசம்: சாம்பியன்ஸ் கிண்ணப்போட்டிக்கு தகுதி
இந்தியாவுடனான ஒருநாள் தொடரை கைப்பற்றியதன் மூலம் வங்கதேச அணி ‘மினி உலகக்கிண்ணம்’என்று அழைக்கப்படும் சாம்பியன்ஸ் கிண்ணப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. சாம்பியன்ஸ் கிண்ணப்போட்டி 2017ம் ஆண்டு இங்கிலாந்தில் நடக்கிறது. போட்டியை நடத்தும் நாடு மற்றும் செப்டம்பர் மாத நிலவரப்படி தரவரிசையில் உள்ள முதல் 7 அணிகள் என்று மொத்தம் 8 அணிகள் மட்டுமே இந்த போட்டிக்கு தகுதி பெற முடியும். தற்போது வங்கதேச அணி 93 புள்ளிகளுடன் 7வது இடம் பிடித்து சாம்பியன்ஸ் கிண்ணப் போட்டிக்கு தகுதி பெறுவதற்கான புள்ளிகளை எட்டி விட்டது. இதனால் முன்னணி அணிகளான மேற்கிந்திய தீவுகள், பாகிஸ்தான் இவற்றில் ஒன்று தகுதி வாய்ப்பை இழக்க நேரிடும்.
வரலாறு படைத்த வங்கதேசம்: சாம்பியன்ஸ் கிண்ணப்போட்டிக்கு தகுதி
Reviewed by Author
on
June 22, 2015
Rating:

No comments:
Post a Comment