அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 78 பேர் கைது
மாத்தறை கிரிந்த கடல் வழியாக, இன்று வெள்ளிக்கிழமை அதிகாலைவேளையில், சட்டவிரோதமான முறையில் கடல்வழியாக அவுஸ்திரேலியாவுக்கு செல்வதற்கு முயற்சித்த 78 பேரை கைதுசெய்துள்ளதுடன் அவர்கள் பயணித்த டோலர் படகையும் கைப்பற்றியுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
கிரிந்தையிலிருந்து 65 கடல் மைல்களுக்கு அப்பால் பயணித்துகொண்டிருந்த போதே இந்த படகை அதிகாலை 12.30 மணியளவில் சுற்றிவளைத்ததாக கடற்படையினர் அறிவித்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட 78பேரில் 59 பேர், வடக்கு கிழக்கைச்சேர்ந்தவர்கள் என்றும் ஏனையோர் சிங்களவர்கள் என்றும் கடற்படையினர் அறிவித்துள்ளனர்.
அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 78 பேர் கைது
Reviewed by NEWMANNAR
on
June 26, 2015
Rating:

No comments:
Post a Comment