முசலியில் தேசிய போசாக்கு தொடர்பிலான சிறப்புக் கண்காட்சி.-Photos
தேசிய போசாக்கு மாதத்தை முன்னிட்டு முசலி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் முசலி பிரதேசத்தில் தேசிய போசாக்கு தொடர்பிலான சிறப்பு கண்காட்சியை நேற்று(24) புதன் கிழமை நடாத்தியுள்ளனர்.
முசலி சுகாதார வைத்திய அதிகாரி எம்.ஒஸ்மன் சாள்ஸ் தலைமையில் இடம் பெற்ற குறித்த கண்காட்சிக்கு பிரதம விருந்தினராக மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அன்ரன் சிசில், சிறப்பு விருந்தினராக வடமாகாண சுகாதார போசாக்கு உத்தியோகத்தர் கே.சுதர்மன் கௌரவ விருந்தினரர்களாக மீன்பிடி,போக்குவரத்து அமைச்சின் மாவட்ட இணைப்புச் செயலாளர் பத்திநாதன் ஜெரோம், மன்னார் செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர் ஜே.ஜே.கெனடி மற்றும் வைத்தியர்கள், அதிபர்கள் என பலர் கலந்து கெண்டு தேசிய போசாக்கு தொடர்பிலான சிறப்பு கண்காட்சியை பார்வையிட்டனர்.
முசலியில் தேசிய போசாக்கு தொடர்பிலான சிறப்புக் கண்காட்சி.-Photos
Reviewed by NEWMANNAR
on
June 25, 2015
Rating:

No comments:
Post a Comment