திரிபோஷா உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது
திரிபோஷா உற்பத்திக்கு தேவையான சோளத்திற்கான தட்டுப்பாடே இதற்கான காரணமென இலங்கை திரிபோஷா நிறுவனம் தெரிவித்துள்ளது.
திரிபோஷா உற்பத்திக்காக 18,000 மெற்றிக் தொன் சோளத்தை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதிக்காக கட்டுப்பாட்டாளர் நாயகத்தினால் திருத்தங்கள் சமர்பிக்கப்பட்டுள்ளன.
இந்த திருத்தங்களை உள்ளடக்கிய புதிய அமைச்சரவை பத்திரம், எதிர்வரும் 07 ஆம் திகதி அமைச்சரவையில் சமர்பிக்கப்பட்டு அனுமதி பெறப்படும் வரை சோள இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை திரிபோஷா நிறுவனத்தின் தலைவர் அமல் அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
கடந்த 21 ஆம் திகதி முதல் திரிபோஷா உற்பத்தி இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
எதிர்வரும் 07 ஆம் திகதியின் பின்னர் சோள இறக்குமதியை முன்னெடுத்து திரிபோஷா உற்பத்தியை மீண்டும் வழமைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக அமல் அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
இதுவரை உற்பத்தி செய்யப்பட்ட திரிபோஷா, நாடளாவிய ரீதியில் விநியோகிக்கப்பட்டுவருவதாக இலங்கை திரிபோஷா நிறுவனத்தின் தலைவர் அமல் அத்தநாயக்க மேலும் கூறியுள்ளார்.

No comments:
Post a Comment