
நடக்கவிருக்கும் பொதுத்தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியே அதிக ஆசனங்களை கைப்பற்றும் என கருத்துக்கணிப்பொன்று தெரிவிக்கின்றது.
கொழும்பிலுள்ள ஊடகம் ஒன்று மேற்கொண்ட கருத்துக்கணிப்பிலேயே இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் பொதுத் தேர்தலில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியே அதிக ஆசனங்களை வெல்லும் வாய்ப்புள்ளது.
இக்கருத்துக்கணிப்பின் படி ஐக்கிய தேசியக் கட்சி பின்னடையும் வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுகின்றன.
இக்கணிப்பீட்டில் கருத்துத் தெரிவித்திருக்கும் 60 வீதமானோர் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியே வெல்லும் வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
ஐ.தே.க. வெல்வதாக தெரிவித்திருப்போர் வீதம் 40 ஆகும்.
எனினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கருத்துப்படி ஜக்கிய தேசிய கட்சியே அதிக ஆசனங்களை கைப்பற்றும் என செய்திகள் வெளிவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment