சாதனை படைத்த ‘உயர்ந்த மனிதர்’: சச்சின் டெண்டுல்கர் பாராட்டு
அமெரிக்காவின் என்.பி.ஏ., அணியில் விளையாடவுள்ள சத்னம் சிங் பமராவுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
பஞ்சாப் கூடைப்பந்து வீரர் சத்னம் சிங் பமரா (19), அமெரிக்க தேசிய கூடைப்பந்து சங்கம் (என்.பி.ஏ.,) நடத்தும் கூடைப்பந்து தொடரில் டல்லாஸ் மாவ்ரிக்ஸ் அணியில் விளையாவுள்ளார்.
இதன் மூலம் உலகப்புகழ் பெற்ற இந்த தொடரில் பங்கேற்கும் முதல் இந்திய வீரர் என்ற சாதனையை சத்னம் சிங் படைத்துள்ளார்.
இதைத் தொடர்ந்து இவருக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுகள் குவிகின்றன.
இது குறித்து கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கூறுகையில், ‘‘இந்திய விளையாட்டு வீரர் ஒருவர் மிகப்பெரிய சாதனையை செய்துள்ளார்.
சத்னம் சிங்கை நினைத்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். அவருக்கு இந்தியா முழுவதும் இருந்து ஆதரவு கிடைக்கும் என்பது உறுதி.
வரும் சீசன் மற்றும் அவரது விளையாட்டு வாழ்க்கையில் சிறந்து விளங்க கட்டாயம் நான் வாழ்த்த விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.
9 வயதில் 5.9 அடி வளர்ந்த சத்னம் சிங், 14 வயதிலேயே 7 அடி உயரம் வளர்ந்து விட்டார்.
தவிர, இவரது குடும்பமே மிகவும் உயர்ந்தது தான். இவரது தந்தை பல்பீர் சிங் 7.1 அடி, பாட்டி 6.9 அடி உயரம் கொண்டவர்களாம்.
சத்னம் சிங்கிற்கு மத்திய மந்திரி ராஜ்யவர்தன் ரதோர், பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டா, பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் ஆகியோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
மேலும் ஐபிஎல் அணிகளான மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் றொயல்ஸ் அணிகளும் வாழ்த்து தெரிவித்துள்ளன.
சாதனை படைத்த ‘உயர்ந்த மனிதர்’: சச்சின் டெண்டுல்கர் பாராட்டு
Reviewed by Author
on
June 28, 2015
Rating:

No comments:
Post a Comment