உலகின் தலைசிறந்த அடையாளங்களில் மூன்றாம் இடத்தில் தாஜ்மஹால்: இரண்டாவது இடத்தில் தமிழர் கட்டிய ஆலயம்
உலகில் தலைசிறந்த அடையாளங்களுக்கான பட்டியலில் இந்தியாவின் தாஜ்மகாலுக்கு மூன்றாவது இடம் வழங்கப்பட்டுள்ளது.
உலகின் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுலா செல்பவர்களுக்கான ஆலோசனைகளை வழங்கிவரும் பன்னாட்டு நிறுவனம் ஒன்று, உலகளவில் சிறந்த அடையாளங்கள் குறித்து பட்டியல் வெளியிட்டது.
அதில் இந்தியாவின் ஆக்ராவில் யமுனை நதி கரையில் அமைந்துள்ள தாஜ்மகால் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. பெரு நாட்டில் உள்ள மச்சு பிச்சு மலைக்கோயில் உலகின் முதல் தலைசிறந்த அடையாள குறியீடாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது இடத்தில் கம்போடியா நாட்டில் தமிழ் மன்னன் சூரியவர்மன் கட்டிய அங்கோவாட் ஆலயம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியல் பல கோடி சுற்றுலா பயணிகளின் தேர்வின் முடிவாக வெளியாகியுள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் ஆக்ரா நகரில் மொகலாய மன்னர் ஷாஜஹானால் 1631 முதல் 1654-ம் ஆண்டுக்கு இடையில் கட்டிமுடிக்கப்பட்ட தாஜ்மகால், முழுவதும் பளிங்குக் கற்களால் உருவாக்கப்பட்டது.
தனது மனைவி மும்தாஜின் நினைவாக ஷாஜஹான் கட்டிய தாஜ்மகால் காதலின் சின்னமாக கருதப்பட்டுவருகிறது. மேலும், உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றாகவும் விளங்கிவருகிறது.
ஆண்டுக்கு சுமார் 40 லட்சம் மக்கள் தாஜ்மகாலை கண்டு, களித்து செல்கின்றனர். இவர்களில் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் என்பது, குறிப்பிடத்தக்கது.
உலகின் தலைசிறந்த அடையாளங்களில் மூன்றாம் இடத்தில் தாஜ்மஹால்: இரண்டாவது இடத்தில் தமிழர் கட்டிய ஆலயம்
Reviewed by Author
on
June 04, 2015
Rating:

No comments:
Post a Comment